கம்பராமாயணம் 8750 · யுத்த 22.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தையலை, இராமன் மேனி தைத்தவேல் தடங்கணாளை - கட்டழகுடைய சீதையை, இராமன் மேனியில் பாய்ந்த வேலைப் போன்ற பெரியகண்களை உடையவளை; கைகளில் பற்றிக் கொண்டார் விமானத்தைக் கடாவு கின்றார் -தம் கைகளில் பற்றிக்கொண்டு புட்பக விமானத்தைச் செலுத்துகின்ற அரக்கியர்; மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து - உண்மையான உயிர் மண்ணுலகத்து ஆக விடுத்து, முன்னை விதியையும் வற்புறுத்தி மாற்றி; விண்மேல் பொய்யுடல் கொண்டு செல்லும் - விண்மேல் பொய்யான உடம்பைக் கொண்டு செல்லுகின்ற; நமனுடைத் தூதர் போன்றார் - எமதூதரைப் போன்றனர்.
இராமன் மேனியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சீதையின் நிலையை விளக்க 'இராமன் மேனி தைத்த வேல் தடங்கணாளை' என்றார். விமானம் புறப்பட்டால் இராமன் திருமேனியைப் பிரிய முடியாமல் எங்கே பாய்ந்து விடுவாளோ என்ற அச்சத்தால் அரக்கியர் சீதையைக் கைகளால் பற்றிக்கொள்ளுகின்றனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The young woman, she of wide spear-like eyes that had pierced into Irāmaṉ's body,
- they held fast in their hands, those who were driving the chariot;
- leaving the true life in the world below, and forcing even fate,
- they were like Yama's messengers carrying off an empty body into the sky.
What the poem says
The episode ends as the demonesses fly Cītai back to the Aśoka grove. Her eyes are fixed so hard on Irāmaṉ's body that they are said to pierce it like spears. The women grip her hands, afraid that as the chariot moves off she will throw herself down to stay beside him.
The poet compares them to the messengers of Yama, god of death, who carry a lifeless shell up into the sky. Cītai's real life, her heart, stays behind on the battlefield with Irāmaṉ.