கம்பராமாயணம் 8757 · யுத்த 23.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உள்ளுறு துன்பம் ஊன்ற - “உள்ளத்தில் உற்ற பெருந்துயரம் பதிந்துள்ளமையினால்; உற்றனன் உறக்கம் அன்றோ - இராமன் மூர்ச்சை உற்றான் அன்றோ?; தெள்ளிதின் உணர்ந்த பின்னை - தெளிவாக (அப்பிரான்) உணர்வு நிலைக்கு வந்த பின்னால்; சிந்தனை தெரிவென் அன்றே - (அவ்விராமனுடைய) சிந்தனை (எத்தகையதாக இருக்கும் என்பதனை) அறிவேன் அன்றோ! வள்ளலோ, தம்பிமாள வாழ்கிலன் - வள்ளல் தன்மையுடைய இராமனோ தம்பி இறந்தபின் தான் வாழமாட்டான் (இதுவே மூர்ச்சை தெளிந்தபின் அவனது முடிவாக இருக்கும்); மாய வாழ்க்கைக் கள்ளனோ வென்றான் - (அங்ஙனமாயின் மாயத் தன்மையை உடைய கள்வனாகிய இந்திரசித்தோ வெற்றி பெற்றவனாவான்?” என்றான் மழையெனக் கலுழும் கண்ணான் - எனத் தனக்குள் கூறிக் கொண்டவனாகிய வீடணன் (பெருந்துன்பமுற்று) மழைபோல் நீர்சொரியுங் கண்களை உடையவனானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Pressed down by the sorrow lodged within him, has he not fallen into a sleep?
- Once he has woken clearly, I know well what his thought will be:
- the generous one will not live on if his brother dies. Has the thief
- whose life is all deceit won, then?” said he, his eyes pouring like rain.
What the poem says
Vīṭaṇaṉ talks to himself. Irāmaṉ has only fainted from grief, but Vīṭaṇaṉ knows him. When he comes round and finds Ilakkuvaṉ dead, he will not choose to live on.
Then Intiracittu, the thief who lives by magic and deceit, would have won after all. The thought makes Vīṭaṇaṉ weep.