கம்பராமாயணம் 8760 · யுத்த 23.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி - தன்வாயை மடித்துக் கொண்டும், இரண்டு கைகளையும் முறுக்கிக் கொண்டும்; வயிரச் செங்கண் தீ உக - பகைமை உணர்ச்சி கொண்ட சிவந்த விழிகளிலிருந்து நெருப்புப் பொறி சிதற; கனகக்குன்றின் திரண்ட தோள்மழையைத் தீண்ட - மேருமலையை ஒத்த திரண்ட புயம் மேகமண்டலத்தைச் சென்றுதொட; ஆயிர கோடி யானைப் பெரும் பிணத்து அமளி மேலான் - ஆயிரங்கோடி யானைகளின் மிக்க பிணங்களாகிய படுக்கைமேல் கிடப்பவனாகிய; காய்சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானைக் கண்டான் - கொல்லுங் கோபத்தையுடைய அனுமன் என்கின்ற கடல் கடந்த வீரனைக் கண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Lips bitten in, both fists clenched, sparks of fire falling
- from his red eyes full of hatred, his massed shoulders like the golden mountain
- touching the rain-clouds, lying on a couch of the huge corpses
- of a thousand crores of elephants, he saw him who crossed the sea: Aṉumaṉ of burning wrath.
What the poem says
Vīṭaṇaṉ finds Aṉumaṉ, the hero who leapt the ocean. Even unconscious he looks fierce: lip bitten, fists clenched, eyes that seem to give off sparks.
His shoulders are as huge as Mount Mēru and reach the clouds. His bed is a heap of dead enemy elephants, which shows how many he killed before he fell.