கம்பராமாயணம் 8761 · யுத்த 23.11

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கண்டு, தன் கண்கள் ஊடு மழை எனக் கலுழி வார
'உண்டு உயிர் 'என்பது உன்னி, உடல் கணை ஒன்று ஒன்று ஆக,
விண்ட நீர்ப் புண்ணின் நின்று மெல்லென வாங்கிக் கையால்
கொண்டல் நீர் முகந்து கொண்டு முகத்தினைக் குளிரச் செய்தான்.

பொருள் · Meaning in Tamil

கண்டு, தன் கண்களூடு மழை எனக் கலுழி வார - (அங்ஙனம் வீடணன் அனுமனை கண்ணுற்று, (அவன் நிலையினை உணர்ந்து) தனது விழிகளின் வழியாக மழை போன்று (கண்ணீர்ப்) பெருக் கெழுதலால்; “உயிர்உண்டு” என்பது உன்னி - (இவனுக்கு) உயிர் உள்ளது என்று அனுமானித்து; உடல் விண்டு உதிர் புண்ணின் நின்று - உடல் பிளவுபட்டு உதிரம் ஒழுகா நின்ற புண்களிலிருந்து; கணை ஒன்று ஒன்று ஆக மெல்லென விரைவின் வாங்கி - அம்புகளை ஒவ்வொன்றாக மென்மையாகவும், விரைவாகவும் எடுத்து; கொண்டல் நீர் கொணர்ந்து கோலமுகத்தினைக் குளிரச் செய்தான் - மேகத்தினின்றும் தண்ணீரைக் கொண்டுவந்து (அவ்வனுமனுடைய) அழகிய முகத்தைக் குளிருமாறு செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing him, as a flood ran from his eyes like rain,
  2. and judging that there was life in him, one by one
  3. he drew out the arrows, gently and swiftly, from the wounds
  4. that gaped and bled in his body, and brought cloud-water to cool his fine face.

What the poem says

Vīṭaṇaṉ weeps at the sight of Aṉumaṉ but sees that he is still alive. He pulls the arrows from his wounds one at a time, quickly but gently.

Then he brings water drawn from the clouds and bathes Aṉumaṉ's face to revive him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭu, taṉ kaṇkaḷūṭu maḻai eṉak kaluḻi vāra
'uṇṭu uyir 'eṉpatu uṉṉi, uṭaṟ kaṇai oṉṟu oṉṟu āka,
viṇṭu utir puṇṇiṉniṉṟu melleṉa viraiviṉ vāṅki
koṇṭal nīr koṇarntu kōla mukattiṉaik kuḷirac ceytāṉ.