கம்பராமாயணம் 8763 · யுத்த 23.13

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

அழுகையோடு உவகை உற்ற வீடணன் - அழுகையோடு மகிழ்ச்சியும் அடைந்த வீடணன்; ஆர்வம் கூர, தழுவினன் அவனை - ஆர்வம் பொங்க அவ்வனுமனைத் தழுவிக்கொண்டான்; தானும் அன்பொடு தழுவி - அனுமன் தானும் வீடணனை அன்போடு தழுவி; 'தக்கோய்! வழு இலன் அன்றே வள்ளல்?' என்றனன் - 'தகுதியுடையோனே! வள்ளலாகிய இராமன் தீங்கல்லாது உளன் அன்றே?' என்று வினவினான்; “வலியன்” என்றான் - (வீடணனும்) 'வழுவின்றி வலியனாக உளன்' என விடை கூறினான்; உலகம் மூன்றும் தலையின்மேல் கொள்ளும் தூயான் தொழுதனன் - (அதுகேட்டு மகிழ்ச்சிப் பெருக்கால்) மூவுலகத்தோரும் தலைமேற்கொண்டு போற்றத்தக்க தூய்மை உடைய அனுமன் இராமனைத் தொழுதனன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Vīṭaṇaṉ, filled with joy as well as weeping, his eagerness overflowing,
  2. embraced him; and he too, embracing him with love, said, “Worthy one,
  3. the generous one has come to no harm, has he?” “He is strong,” said the other;
  4. and the pure one, whom all three worlds bear upon their heads, joined his hands in worship.

What the poem says

Vīṭaṇaṉ weeps and rejoices together and embraces Aṉumaṉ. Aṉumaṉ's first question is about Irāmaṉ, not himself: is his generous lord safe?

Told that Irāmaṉ is unharmed and strong, Aṉumaṉ folds his hands in worship toward him. The poet calls Aṉumaṉ the pure one whom all three worlds honour.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḻukaiyōṭu uvakai uṟṟa vīṭaṇaṉ ārvam kūra,
taḻuviṉaṉ avaṉai, tāṉum aṉpoṭu taḻuvi, 'takkōy!
vaḻuilaṉ aṉṟē, vaḷḷal? ' eṉṟaṉaṉ; 'valiyaṉ 'eṉṟāṉ;
toḻutaṉaṉ, ulakam mūṉṟum talaiyiṉmēl koḷḷum tūyāṉ.