கம்பராமாயணம் 8764 · யுத்த 23.14

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அன்பு தன் தம்பி மேலது அறிவினை மயக்க ஐயன்
துன்பொடும் துயிலன் ஆனான்; உணர்வு இனித் தொடர்ந்த பின்னை
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலம்! 'என்றலோடும்,
'தன் பெருந் தன்மைக்கு ஒத்த சாம்பன் எத் தலையன்? 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

தன் தம்பி மேல் அன்பு ஆத்து அறிவினை மயக்க - 'தன் தம்பி மேல் கொண்ட அன்பு தனது அறிவினை மயக்கியதால்; ஐயன் துன்பொடு துயிலன் ஆனான் - இராமன் துன்பத்தோடு கலந்த துயிலுடையவனாக (மூர்ச்சித்தவனாக) ஆனான்; இனி உணர்வு தொடர்ந்த பின்னே - இனி அவனுக்கு உணர்வு வந்தபின்; என்புகுந்து எய்தும் என்பது அறிகிலென் என்றலோடும் - என்ன நடக்கும் என்பதனை அறியேன் என்று வீடணன் கூறியவுடன்; தன் பெருந்தகைமைக்கு ஒத்த சாம்பன் எத்தலையன் என்றான் - (அனுமன் வீடணனை நோக்கி) தன் பெருந்தகைமைக்கு ஒத்த (மூப்பினை உடைய) சாம்பன் எவ்விடத்து உள்ளான்! என்று வினவினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “As his love for his brother clouded his mind, the lord
  2. has fallen into a sleep of sorrow; once his senses return,
  3. what will come of it I cannot tell!” As soon as he said this,
  4. the other asked, “Where is Cāmpaṉ, whose worth matches his greatness?”

What the poem says

Vīṭaṇaṉ explains that Irāmaṉ is not wounded but has fainted from love and grief for his brother. He fears what Irāmaṉ may do when he wakes and finds Ilakkuvaṉ lifeless.

Aṉumaṉ answers by asking for Cāmpaṉ, Jāmbavān, the aged bear-king. He is the elder whose wisdom suits his great age and standing, and who would know what to do.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉpu taṉ tampimēlatu aṟiviṉai mayakka aiyaṉ
tuṉpoṭum tuyilaṉ āṉāṉ; uṇarvuiṉit toṭarnta piṉṉai
eṉ pukuntu eytum eṉpatu aṟikileṉ! 'eṉṟalōṭum,
'taṉ perun takaimaikku otta cāmpaṉ et talaiyaṉ? 'eṉṟāṉ.