கம்பராமாயணம் 8765 · யுத்த 23.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
யாண்டும் கண்டிலென் அவனை அறிந்திலென் - அச்சாம்பனை எவ்விடத்தும் கண்டிலேன், ஆதலால் அவனைப் பற்றி ஒன்றும் அறிந்திலேன்; “ஆவி யாக்கை பிறிந்திலன்; உளன்” என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் - உயிர் உடம்பினின்றும் நீங்கப் பெற்றானோ அன்றி உயிரோடு உளனோ என ஒன்றும் தெரியாதவனாய் வந்துள்ளேன்; என்று செறிந்த தார் நிருதர் வேந்தன் உரைசெய - என் நெருங்கிய மலர்மாலையை அணிந்த அரக்கர் வேந்தனாகிய வீடணன் கூற; காலின் செம்மல், 'இறும்திறம் அவனுக்கு இல்லை, நாடுதும், ஏகி,' என்றான் - காற்றின் மகனான அனுமன், “இறக்கும் தன்மை அவனுக்கு இல்லை. ஆதலால், நாம் சென்று அவனைத் தேடுவோம்” என்று கூறினான்.
சாம்பவன் சிரஞ்சீவிகளில் ஒருவன்; ஆகவே, அவன் இறந்திருக்க முடியாது என்பது அனுமன் கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “I know nothing of him; nowhere have I seen him; whether he has
- not parted life from body and lives, I could not tell at all; I came away,”
- said the king of the demons with his thick garland; and the noble son of the Wind
- said, “There is no way for him to die; let us go and search.”
What the poem says
Vīṭaṇaṉ, the demon king with his dense garland, has not seen Cāmpaṉ and does not know whether he is alive. Aṉumaṉ, son of the Wind, is sure he is.
As the commentary explains, Jāmbavān is one of the deathless ones, so Brahmā's weapon cannot have killed him. The two set out to find him.