கம்பராமாயணம் 8768 · யுத்த 23.18

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரக்கனோ? என்னை ஆளும் அண்ணலோ? அனுமன்தானோ? -வீடணனோ அல்லது என்னை ஆட்கொண்ட இராமனோ? அல்லது அனுமன்தானோ?; இரக்கம் உற்று அருள வந்த தேவரோ முனிவரேயோ? - இரக்கங்கொண்டு (இத்துன்பத்தை நீக்கி) அருள் செய்ய வந்த தேவரோ? முனிவர்களோ?; மாற்றலர் மலைந்து போனார் வரக்கடவார்கள் அல்லர் - பகைவர்கள் போர் செய்து வெற்றியுடன் சென்றார்களாதலின், அவர்கள் (இவ்விரவில்) வரமாட்டார்கள்; “புரக்க உள்ளாரே” என்னாக் கருதினன் பொருமல் தீர்ந்தான் - (எனவே) இப்போது வருபவர்கள் எம்மைக் காப்பாற்றும் தன்மைஉள்ள அன்பரே ஆவர் என எண்ணி மனத்துயர் நீங்கப் பெற்றவனானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Is it the demon? Is it the lord who rules me? Is it Aṉumaṉ himself?
  2. Is it gods come in pity to show grace? Or is it sages?
  3. It cannot be the foe, who fought and went away;
  4. these must be ones who come to save us!” So he thought, and his anguish eased.

What the poem says

Jāmbavān guesses who might be coming. It could be the demon Vīṭaṇaṉ, Irāmaṉ his master, Aṉumaṉ, or gods or sages come out of pity.

The enemy left the field in victory and will not return in the night. So whoever is coming must be a friend come to help, and the thought calms him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'arakkaṉō? eṉṉai āḷum aṇṇalō? aṉumaṉtāṉō?
irakkam uṟṟu aruḷa vanta tēvarō? muṉivarēyō?
varak kaṭavārkaḷ allar māṟṟalar malaintu pōṉār;
purakka uḷḷārē! 'eṉṉāk karutiṉaṉ, porumal tīrntāṉ.