கம்பராமாயணம் 8771 · யுத்த 23.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விரிஞ்சன்தன் படை என்றாலும் - பிரமனுடைய படைக்கலன் (பிரமாத்திரம்) ஆனாலும்; வேதத்தின் வேதம் அன்ன அரிந்தமன் தன்னை - வேதத்திற்கும் மேலான வேதம் போன்றவனும் பகைவரை அழிக்க வல்லவனுமான இராமனை; ஒன்றும் ஆற்றிலது என்னும் ஆற்றல் முன்னே தெரிந்தனென் - ஒன்றும் செய்யாது என்பதற்குரிய அவனுடைய ஆற்றலை முன்னமே தெரிந்திருக்கின்றேன்; அன்னான் செய்தது என்? தெரித்தி என்றான் - 'அப்பெருமான் செய்த செயல் என்ன? தெரிவிப்பாயாக!' எனச் சாம்பன் வினவினான்; 'பெரும! பெருந்தகை துன்ப வெள்ளத் துயில் உளான்' என்றான் - பெருமானே! பெருந்தகையான இராமன் துன்ப வெள்ளத்தினால் தோன்றிய துயிலில் இருக்கின்றான் (துன்பத்தினால் உணர்விழந்து கிடக்கின்றான்) என்றான் (அனுமன்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Though it be the weapon of Viriñcaṉ, I have known from of old the power
- by which it can do nothing at all to the foe-tamer who is like
- the Veda of the Vedas; what has he done? Tell me,” he said;
- “The great one lies in a sleep of the flood of sorrow, my lord,” said the other.
What the poem says
Jāmbavān is sure that the Brahmā weapon, Viriñcaṉ's weapon, cannot have harmed Irāmaṉ. Irāmaṉ is the supreme being, the very essence of the Vedas, and the subduer of all enemies. So he asks what Irāmaṉ is doing.
Aṉumaṉ replies that the great one is unwounded but has been overwhelmed by grief and lies unconscious.