கம்பராமாயணம் 8772 · யுத்த 23.22

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமே? யாக்கை வேறே;
இன்னுயிர் ஒன்றே மூலத்து இருவரும் ஒருவரே யால்;
இன்னது கடக்கத் தாழாது இப்பொழுது இமைப்பின் முன்னம்
கொன்னியல் வயிரத் தோளாய் மருந்துபோய்க் கொணர்தி 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

மூலத்து இருவரும் ஒருவரேயால் - இராமஇலக்குவர் ஆகிய இருவரும் தமக்கு மூலமான தெய்வநிலையில் ஒருவரே ஆவர்; ஆக்கை வேறே இன் உயிர் ஒன்றே - (இப்போதும்) உடம்பு மட்டும் வேறு, இனிய உயிர் இருவருக்கும் ஒன்றாகும்; அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமே - ஆதலால் அந்த இலக்குவன் இறந்து கிடக்கும் நிலையைக் கண்டால் ஆற்றி இருப்பானோ? (ஆற்றாது மூர்ச்சையுறல் இயல்பே); கொன்இயல் வயிரத்தோளாய் - வலிமை பொருந்திய வயிரம் போன்ற தோள்களை உடையவனே! (அனுமனே); இன்னது கிடைப்பத் தாழாது இங்கு இனி இமைப்பின் முன்னம் - இத்துன்பநிலைக்கு மிகுதியும் தாழ்த்தல் செய்யாது இனி இங்கு கண்ணிமைப் பொழுதிற்கு முன்னமேயே; 'மருந்துபோய்க் கொணர்தி' என்றான் - (உயிர்கொடுக்கும்) மருந்து போய்க் கொண்டு வருக என்று சாம்பன் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Seeing that one's state, could he bear it? Their bodies are different;
  2. their sweet life is one; at the root the two are one alone.
  3. To get past this, without delay, before an eye can blink,
  4. you of mighty diamond shoulders, go and bring the medicine!” he said.

What the poem says

Jāmbavān explains why Irāmaṉ fainted. In their divine origin he and Ilakkuvaṉ are one being. They have two bodies but share one life, so Irāmaṉ could not bear to see his brother lying as if dead.

Then he gives Aṉumaṉ his task: go at once, without losing a moment, and bring the medicine that restores life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṉavaṉtaṉmai kaṇṭāl āṟṟumē? yākkai vēṟē;
iṉ uyir oṉṟē; mūlattu iruvarum oruvarēyāl;
iṉṉatu kaṭakkat tāḻātu iṅku iṉi imaippiṉmuṉṉam
koṉ iyal vayirattōḷāy! maruntu pōyk koṇarti 'eṉṟāṉ.