கம்பராமாயணம் 8777 · யுத்த 23.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறிவின் மிக்கான் - அறிவில் மிக்கவனான சாம்பவன்; மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் - இறந்தவரை உயிர் பெறச்செய்யும் மருந்து ஒன்றும்; உடல்வேறு வகிர்கள் ஆகக் கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் - உடம்பு வெவ்வேறு பிளவுகளாகக் கிழிந்தாலும் முன்போலப் பொருந்தச் செய்யும் ஒரு மருந்தும்; படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும் - (உடம்பில் தைத்திருக்கும்) படைக்கலங்களை வெளிப்படுத்தும் மருந்து ஒன்றும்; மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள - மீண்டும் தம் முன்னைய உருவையே கொடுக்கும் உண்மை மருந்தும் அங்கு உள்ளன; வீர! நீ ஆண்டு ஏகிக் கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் - வீரனே! நீ அங்கு சென்று அவற்றைக் கொணர்வாயாக என அவற்றின் அடையாளத்தோடும் (அனுமனுக்குச்) சொன்னான்.
மாண்டாரை உய்விக்கும் மருந்து, மிருதசஞ்சீவினி; உடற் கிழிவைப் பொருந்துவிப்பது, ஸந்தானகரணீ; படைக்கலங்கள் கிளைப்பது, விஸல்யகரணீ; மீண்டேயும் தம் உருவை அருளுவது சாவர்ண்ய கரணீ - இவை முதனூலிற் கூறப் பெறுபவை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “There is one medicine that revives the dead, and one medicine that joins
- the body again though it be torn apart into separate strips, one that draws out weapons,
- and one true medicine that gives back once more one's own form; hero,
- go there and bring them,” said the one great in wisdom, telling their signs as well.
What the poem says
Jāmbavān, wisest of the monkey host, names the four herbs Aṉumaṉ must bring and describes how to recognise them.
One brings the dead back to life. One knits together a body cut to pieces. One draws out weapons lodged in the flesh. One restores the body's original form and colour. The commentary gives their Sanskrit names from Vālmīki's original: Mṛtasañjīvanī, Sandhānakaraṇī, Viśalyakaraṇī and Sāvarṇyakaraṇī.