கம்பராமாயணம் 8778 · யுத்த 23.28

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்ன மருந்து ஒரு நான்கும் - இத்தகைய வாயமருந்து நான்கும்; பயோத்தியைக் கலக்கிய ஞான்று எழுந்த - பாற்கடலைக்கடைந்த காலத்து, அதிலிருந்து தோன்றின; தேவர் உன்னி அமைத்தனர் - தேவர்கள் அவற்றின் பயனை நினைத்து அவற்றை அம்மலையில் அமையுமாறு செய்தனர்; மறைக்கும் எட்டாத பரஞ்சுடர்- வேதங்களுக்கும் எட்டாத திருமால்; இவ்உலகம் மூன்றும் தன் இருதாள் உள் அடக்கிப் பொலிபோழ்தின் - இவ்வுலகம் மூன்றையும் தன் இரண்டு அடிக்குள் அடக்கிக் கொண்டு நின்ற போது; யான் முரசம் சாற்றும் வேலை - நான் வெற்றி முரசை அடிக்கையில்; அன்னவை கண்டு, உயாவுதலும் - அம் மருந்தினைக் கண்டு அவற்றைப் பற்றிக் கேட்டபோது; தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் - பழமைசான்ற முனிவர்கள் அவற்றின் பண்புகளை எனக்குத் தெரிவித்தனர். ஆல்- அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “These four medicines arose on the day the Milk Ocean was churned; the gods
  2. with forethought set them there. When the supreme light beyond the reach of the Vedas
  3. shone forth, holding these three worlds within his two feet, and I was beating the drum,
  4. I saw them and asked, and the ancient sages told me what they were.”

What the poem says

Jāmbavān explains how he knows of the herbs. They rose from the Milk Ocean when the gods and demons churned it, and the gods planted them on that mountain for later need.

He learned their properties long ago, when Viṣṇu took the form of Trivikrama and measured the three worlds in two strides. Jāmbavān went round the world beating the victory drum, saw the herbs on his way, and the ancient sages told him what they were. The story also shows how very old Jāmbavān is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉa maruntu oru nāṉkum, payōttiyaik kalakkiya ñāṉṟu, eḻunta; tēvar
uṉṉi amaittaṉar; maṟaikkum eṭṭāta parañcuṭar iv ulakam mūṉṟum
taṉ iru tāḷ uḷ aṭakkip poli pōḻtiṉ yāṉ muracam cāṟṟum vēlai,
aṉṉavai kaṇṭu, uyāvutalum, tol muṉivar avaṟṟu iyal eṟku aṟivittārāl.