கம்பராமாயணம் 8779 · யுத்த 23.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இம் மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் -இந்த மருந்தைக் காத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் கணக்கிலாதன; யார்க்கும் இரங்கா - அவை யார்க்கும் இரக்கம் கொள்ளமாட்டா; நெய்ம் மருங்கு படரகில்லா நெடுநேமிப் படையும் அவற்றுடனே நிற்கும் - நெய்பூசப் பெற்றதும், அருகில் செல்வதற்கும் இயலாததும் ஆகிய நெடிய சக்கரப்படையும் அத்தெய்வங்களுடன் காத்து நிற்கும்; பொய்ம் மருங்கின் நில்லாதாய் - பொய்யின் அருகில் கூட நில்லாதமெய்மை உடையவனே! புரிகின்ற காரியத்தின் பொதுமைநோக்கி - நீ செய்கின்ற செயலின் பொதுத்தன்மையினை நோக்கி; கைம் மருங்கு உண்டாம் - நின் கையருகில் நிற்கும்; நின்னைக் காவாய் என்று அப்புறம் போய்க்கரக்கும் என்றான் - (மேலும்) உன்னை, “இம் மருந்தை மீட்டும் கொணர்ந்து கெடாமல் காப்பாயாக” எனக் கேட்டுக் கொண்டு அப்புறம் போய் மறைந்து கொள்ளும்” என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “The gods who dwell guarding this medicine are past counting; they pity no one;
- and with them stands the long discus-weapon, smeared with oil, that none can approach.
- You who never stand near falsehood! Seeing that the deed you do is for the common good,
- they will come to your hand, ask you, ‘Guard it,’ and go off and hide,” he said.
What the poem says
Jāmbavān warns that the herbs are guarded by countless merciless deities and by a great discus, polished with oil, that no one can come near.
But because Aṉumaṉ is utterly truthful and acts for the good of all, not for himself, the guardians will not fight him. They will hand the herbs over, ask him to take care of them, and withdraw out of sight.