கம்பராமாயணம் 8783 · யுத்த 23.33

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கிழிந்தன, மாமழைக் குலங்கள், கீண்டது, நீண்டு அகல் வேலை; கிழக்கும் மேற்கும்;
பொழிந்தன, மீன்; தொடர்ந்து எழுந்த, பொருப்பு இனமும், தருக் குலமும், பிறவும், பொங்கி;
அழிந்தன வானவர் மானம், ஆகாயத் திசையினில் பேர் அசனி என்ன
விழுந்தன, நீர்க் கடல் அழுந்த; ஏறின மேல், கீறின போய்த் திசைகள் எல்லாம்.

பொருள் · Meaning in Tamil

மாமழைக்குலங்கள் கிழிந்தன - (அனுமன் விசைத்தெழவே) பெரிய மேகக்கூட்டங்கள் கிழிந்தன; நீண்டகல் வேலை கிழக்கும் மேற்கும் கீண்டது - நீண்டு அகன்றுள்ள தென்கடல் கிழக்கும் மேற்குமாக பிரிந்து கிழிந்தது; மீன் பொழிந்தன - விண்மீன்கள் உதிர்ந்தன; பொருப்பு இனமும் தருக்குலமும் பிறவும், பொங்கி தொடர்ந்து எழுந்த - மலைத்தொகுதிகளும், மரத்தொகுதிகளும், பிறவும் கிளர்ந்து தொடர்ந்து எழுந்தன; வானவர் மானம் ஆகாயத்து இடையன அழிந்தன - தேவர்களின் விமானம் ஆகாயத்தின் நடுவே அழிந்தனவாய்; பேர் அசனி என்ன நீர்க் கடல் அழுந்த விழுந்தன -பெரிய இடியைப் போல நீர்க்கடலில் அழுந்த விழுந்தன; மேல் ஏறின போய்த்திசைகளெல்லாம் கீறின - அதனால் கடல்நீர் மேல் ஏறின வாய்த் திசைகளெல்லாம் கிழிந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great banks of cloud were torn; the long wide sea was split, east and west;
  2. the stars rained down; hills in their ranks, trees in their clans and all else surged up and followed after;
  3. the gods' chariots in mid-sky were wrecked and, like great thunderbolts,
  4. fell, sinking into the watery sea; the waters rose up, and went and rent all the quarters.

What the poem says

The poet describes the havoc caused by the force of Aṉumaṉ's leap. The clouds are torn apart, the southern sea is split in two, and the stars fall from the sky.

Mountains and trees are pulled up into the air after him. The gods' flying chariots are smashed and fall into the sea like thunderbolts, and the water they throw up seems to tear open the horizons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kiḻintaṉa, mā maḻaik kulaṅkaḷ, kīṇṭatu, nīṇṭu akal vēlai; kiḻakkum mēṟkum;
poḻintaṉa, mīṉ; toṭarntu eḻunta, poruppuiṉamum, taruk kulamum, piṟavum, poṅki;
aḻintaṉa vāṉavar māṉam, ākāyattu iṭaiyaṉa pēr acaṉi eṉṉa
viḻuntaṉa, nīrk kaṭal aḻunta; ēṟiṉa mēl, kīṟiṉa pōyt ticaikaḷ ellām.