கம்பராமாயணம் 8785 · யுத்த 23.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கடல் முன்னே நிமிர்ந்து ஓட - கடல் முன்னால் நிமிர்ந்து ஓடவும்; கால்பின்னே தொடர்ந்து ஓட -கால்கள் பின்னால் தொடர்ந்து ஓடவும்; கடிதின்செல்வான் உடல் முன்னே செல - விரைந்து செல்லும் பொருட்டு உடல் முன்னே செல்லவும்; உள்ளம் கடைக்குழையாய் செல - மனம் கடைசியாக வேகங் குறைந்ததாகப் பின்னே செல்லவும்; செல்வான் உருவை நோக்கி - செல்கின்றவனாகிய அனுமனின் உருவத்தைப் பார்த்து; தேவர் எல்லாம் அடல்முன்னே தொடங்கிய நாள் - தேவர்கள் அனைவரும் “அரக்கரைக் கொல்லும் போர்த்தொழிலை முன்னே தொடங்கிய நாளில்; ஆழ்கடல் சூழ் இலங்கை என்னும் - ஆழ்ந்த கடலால் சூழப் பெற்ற இலங்கை என்னும்; அரக்கர் வாழும் திடல் முந்நீர் இடைப்படுத்து - அரக்கர் வாழ்கின்ற தீவினை எடுத்துக் கடலிடை வீழ்த்தி; நம்துயர் மறித்திலன் என்றார் - நம் துயரைத்தடுத்திலனே” என்று கூறினர்.
“திடல் முந்நீர்க் கிடை அறிந்தான்; முரிந்தது” என்ற இறுதி அடி, “திடல் முந்நீர் இடைப்படுத்து மறித்திலன்” என்று பாடம் கொள்ளப் பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sea racing on ahead of him, the wind running close behind, the body
- of the swift traveller going first and his mind trailing last of all, watching the form of the one who went,
- “On the day the fight first began, if he had cast into the ocean the island
- where the demons live, Ilaṅkai ringed by the deep sea, our sorrow would have been stopped,” said all the gods.
What the poem says
Aṉumaṉ moves so fast that the sea races ahead of him and the wind trails behind. His body even outruns his mind, which is proverbially the swiftest thing there is.
Seeing this strength, the gods ask why he did not simply pick up the island of Ilaṅkai at the start of the war and drop it into the ocean, which would have ended their troubles long ago. The commentary notes that the printed text of this last line varies between manuscripts and explains the reading it follows.