கம்பராமாயணம் 8787 · யுத்த 23.37

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வான நாட்டு உறைகின்றார், 'வயக் கலுழன் வல்விசையால், மாயன் வைகும்
தான நாட்டு எழுகின்றான் 'என்று உரைத்தார் சிலர் சிலர்கள் 'விரிஞ்சன்தான் தன்
ஏனநாட்டு எழுகின்றான் 'என்று உரைத்தார் சிலர் சிலர்கள் 'ஈசன் அல்லால்
போன நாட்டிடை போக வல்லரோ? இவன் முக்கண் புனிதன் 'என்றார்.

பொருள் · Meaning in Tamil

வானநாட்டு உறைகின்றார் சிலர்- வான நாட்டில் வாழ்கின்றவர்கள் சிலர்; “வயக்கலுழன் வல்விசையால் - வலிமைமிக்க கருடன் வலியவேகத்தோடு; மாயன்வைகும் தான நாட்டு எழுகின்றான்” என்று உரைத்தார் - திருமால் தங்கியுள்ள இடமாகிய வைகுந்தத்திற்குச் செல்கின்றான்' என்று சொன்னார்கள்; சிலர்கள் “விரிஞ்சன் தான்தன் ஏனைநாட்டு எழுகின்றான்” என்று உரைத்தார் - வேறுசிலர் 'பிரமன்தான் தன் நாட்டிலும் வேறாகிய நாட்டிற்குச் செல்ல எழுகின்றான்' என்று சொன்னார்கள்; சிலர்சிலர்கள் “ஈசன் அல்லால் போன நாட்டிடைப் போகவல்லாரோ? - சிலர்சிலர் “சிவன் அல்லாதவர்கள், மிகவும் உயர்ந்து போன நாட்டிடையே செல்லவல்லவர்களோ? (அல்லர்! ஆதலின்); இவன் முக்கண் புனிதன்” என்றார் - இவன், மூன்று கண்களையுடைய தூயவனாகிய சிவனே என்று சொன்னார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some of those who dwell in the heavenly land said, “It is mighty Garuḍa, with his strong speed,
  2. rising to the realm where Māyaṉ dwells”; some others said, “It is Viriñcaṉ himself
  3. rising to some land other than his own”; and some others said, “Who but Īcaṉ
  4. could travel into the land beyond? This is the pure one with three eyes.”

What the poem says

The gods watching Aṉumaṉ fly past cannot tell who he is. Some think he is Garuḍa, the great eagle, flying to Viṣṇu's heaven. Others guess Brahmā, heading somewhere beyond his own world.

Still others say no one but Śiva, the pure three-eyed god, could go higher than every world, so this must be him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉa nāṭṭu uṟaikiṉṟār, 'vayak kaluḻaṉ val vicaiyāl, māyaṉ vaikum
tāṉa nāṭṭu eḻukiṉṟāṉ 'eṉṟu uraittār cilar cilarkaḷ 'viriñcaṉtāṉ taṉ
ēṉai nāṭṭu eḻukiṉṟāṉ 'eṉṟu uraittār cilar cilarkaḷ 'īcaṉ allāl
pōṉa nāṭṭiṭai pōka vallarō? ivaṉ mukkaṇ puṉitaṉ 'eṉṟār.