கம்பராமாயணம் 8788 · யுத்த 23.38

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மேன்மேல் உள்ளார் - மேல்மேல் உள்ள உலகத்தவர்கள் சிலர்; வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் இவன் - விரும்பிய உருவந்தாங்கி விளையாடுகின்றவனாகிய இவன்; மெய்வேதம் நான்கும் தீண்டு உருவன் அல்லாத திருமாலே என்றார் - உண்மையான வேதங்கள் நான்கும் எட்டுதற்குரிய வடிவினன் அல்லாத திருமாலே என்றார்; “தெரிய நோக்கி காண்டும்” என-(சிலர்) 'தெளிவுற நோக்கிப் பார்ப்போம்' என்று நினைக்க; இமைப்பதன் முன்கட்புலமும் கடந்து அகலும் - (அவர்களின் இமைப்பொழுதிற்கு முன்னமே கட்புலத்தைக் கடந்து செல்லுவான்; இன்னும் காண்மின் மீண்டு வரும் தரம் அல்லன் வீட்டுலகம் புகும் என்றார் -(மற்றும் சிலர்) 'இன்னும் பாருங்கள் இவன் திரும்பிவரும் தன்மையன் அல்லன், வீட்டுலகத்திற்குச் செல்லுவான்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Taking whatever form he wishes, he has risen and is at play: he is Tirumāl himself,
  2. whose form not even the four true Vedas can touch,” they said; when they said, “Let us look closely
  3. and see,” before they could blink he passed beyond the reach of their eyes; “Look further:
  4. he is not one to come back; he is entering the world of release,” said those who dwell higher and higher.

What the poem says

Beings in the still higher worlds guess too. Some say this must be Viṣṇu himself, who takes any form he likes for sport and whom even the Vedas cannot fully reach.

When they try to look more closely, he has already passed out of sight in less than a blink. Others decide he must be going to the world of final liberation, from which no one returns.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vēṇṭu uruvam koṇṭu eḻuntu, viḷaiyāṭu kiṉṟāṉ, mey vētam nāṉkum
tīṇṭu uruvaṉ allāta tirumālē ivaṉ' eṉṟār, 'teriya nōkkik
kāṇṭum' eṉa imaippataṉmuṉ kaṭ pulamum kaṭantu akalum; iṉṉum kāṇmiṉ,
mīṇṭu varum taram allaṉ, vīṭṭulakam pukum' eṉṟār, mēṉmēl uḷḷār.