கம்பராமாயணம் 8790 · யுத்த 23.40

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாசநாள் மலரோன்தன் உலகு அளவும் நிமிர்ந்தனன் - மணம் பொருந்திய அன்றலர்ந்த தாமரைமலரில் வாழ்கின்ற பிரமனுடைய உலகத்தின் அளவும் உயர்ந்தனவாகி; மேல் வானம் ஆன காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவினிடையே - அதன் மேலுள்ள வானமான ஆகாயமெல்லாம் மறைத்த தன்னுடைய உருவத்தில் உள்ள; கனகத் தோள்கள் வான்முகடு உரிஞ்ச வீச - பொன்னிறத்தோள்களை வானத்தின் உச்சியில் பட்டுத் தேய்க்கும்படி வீசுதலால்; விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம - விசையால் எழுகின்ற அவனது உடம்பில் பிறந்த முழக்கம் மிக; ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் - (அதனால்) திசைக்காவலர்கள் தலைநடுக்கமுற்றனர்; அண்டகோளம் விதிர் எறிந்தது - அண்டமாகிய உருண்டை விதிர் விதிர்ப்பு எய்தியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He rose up as high as the world of him who dwells in the fragrant new-blown flower; and as, from his form
  2. that hid all the open space of the sky above, his golden shoulders
  3. swung, grazing the vault of heaven, and the roar born of the body of the one rising with force swelled,
  4. the guardians of the quarters shook their heads in alarm, and the globe of the cosmos trembled.

What the poem says

Aṉumaṉ's body now reaches as high as Brahmā's world and blocks out the whole sky above it. His shoulders scrape the roof of heaven as he swings his arms.

The roar of his flight is so loud that the gods who guard the eight directions shake with fear, and the round shell of the universe trembles.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāca nāḷ malarōṉtaṉ ulaku aḷavum nimirntaṉaṉ, mēl vāṉam āṉa
kācam āyiṉa ellām karanta taṉatu uruviṭaiyē kaṉakat tōḷkaḷ
vīca, vāṉ mukaṭu uriñca, vicaittu eḻuvāṉ uṭal piṟanta muḻakkam vimma
ācai kāvalar talaikaḷ potireṟintār vitir eṟintatu aṇṭa kōḷam.