கம்பராமாயணம் 8791 · யுத்த 23.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அண்ணல் எழுந்தநாள் உலகுக்கெல்லாம் - பெருமை சான்றவனாகிய அனுமன் வளர்ந்து எழுந்த நாள், உலகங்கட்கெலாம்; தொடுத்த நாள் மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர் - அன்றலர்ந்த மலர்களைத் தொடுத்த மாலையை அணிந்த தேவர்களும் முனிவர் முதலாய பெரியோர்களும்; அடுத்த நான் மறைகள் ஓதி வாழ்த்தலால் - தமக்குரிய நான்கு வேதங்களை ஓதிக் கொண்டு வாழ்த்துக் கூறி நிற்க; அவுணர் வேந்தன் கொடுத்தநாள் - அவுணர் வேந்தனாகிய மாபலி தாரைவார்த்துக் கொடுத்தநாளில்; அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம் எடுத்த நாள் ஒத்தது - உலகத்தை அளந்து கொண்ட வாமன மூர்த்தியின் குறுகிய அளவினை உடைய பாதத்தை (பெரிதாக்கி) விண்ணின் மேல் எடுத்த நாளை ஒத்து மகிழ்வூட்டியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the gods with garlands of fresh-strung flowers, the sages and the other ancient ones
- chanted the four Vedas that belong to them and blessed him, the day the great one rose
- was, for all the worlds, like the day the Dwarf, who measured out and took what the demon king had given,
- lifted his little foot.
What the poem says
As Aṉumaṉ rises, the gods and sages chant the Vedas and bless him. The poet compares the moment to the story of Vāmana, the dwarf form of Viṣṇu.
Vāmana asked the demon king Mahābali for three paces of land. When the gift was poured out to him, he grew to cosmic size and lifted his small foot across the heavens. Aṉumaṉ's growth to fill the sky brings the worlds the same awe and joy.