கம்பராமாயணம் 8792 · யுத்த 23.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேவரும் முனிவர் தாமும் சித்தரும் தெரிவைமாரும் - தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் அவர்தம் மனைவிகளும்; மூவகை உலகினுள்ளார் உவகையால் தொடர்ந்து மொய்த்தார்- மூவுலகத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சி மிகுதியால் தொடர்ந்து வானில் நெருங்கினவர்களாய்; தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த - தூவிய மணிகளும், சந்தனமும், சுண்ணப்பொடியும் மலர்களும் அனுமனின் உடல்மேல் தொத்தி நிற்க; பூவுடை அமரர் தெய்வத் தருஎன விசும்பில் போனான் -தேவர்களுக்குரிய, மலர்கள் நிறைந்த தெய்வத்தன்மையுடைய கற்பகத்தரு என வான்வழியே சென்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Gods and sages, siddhas and their women,
- those of all three kinds of world, crowded after him in joy;
- and with the gems, sandal paste, fragrant powder and flowers they scattered clinging to him,
- he went through the sky like the flowering divine tree of the immortals.
What the poem says
Beings from all three worlds, including gods, sages, siddhas and their wives, follow Aṉumaṉ in delight and shower him with jewels, sandal paste, scented powder and flowers.
Covered in these offerings, he looks like the wish-granting tree of heaven, the Kaṟpakam, in full bloom and moving through the sky.