கம்பராமாயணம் 8793 · யுத்த 23.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இமையமால் வரையை உற்றான்- அனுமன் இமயம் என்னும் பெரிய மலையை அடைந்தான்; அங்குஉள இமைப்பிலோரும் கமையுடை முனிவர் - அங்கு வாழும் இமையாக்கண்ணராகிய தேவர்களும், பொறுமையுடைய முனிவர்களும்; மற்றும் அறன்நெறி கலந்தோர் எல்லாம் - மேலும் அறநெறி வழுவாப் பெரியோரும், ஆகிய அனைவரும்; “அமைக, நின் கருமம்!” என்று வாழ்த்தினர் - (அனுமனைப் பார்த்து) 'நீ மேற்கொண்டுள்ள செயல் இனிது நிறைவேறுவதாக' என்று வாழ்த்தினார்கள்; அதனுக்கு அப்பால் உமையொரு பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் - அதன் பின்னர் உமையம்மையை இடப்பாகங் கொண்ட சிவபெருமான் தங்கியுள்ள கயிலை மலையைக் கண்டு மகிழ்ச்சி கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He reached the great Himalaya mountain; the unblinking gods who live there,
- the forbearing sages and all others who keep to the way of dharma
- blessed him: “May your task be accomplished!” Beyond it,
- he saw Kailāsa, where he who has Umā as his half dwells, and was filled with joy.
What the poem says
Aṉumaṉ reaches the Himalaya. The gods, who never blink, the patient sages and all the righteous who live there bless his mission.
Beyond it he sees Mount Kailāsa, home of Śiva, who shares his body with his consort Umā, and the sight fills him with joy.