கம்பராமாயணம் 8795 · யுத்த 23.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“இவன் எழுந்த தன்மை என்?” என்று உலகு ஈன்றாள் கேட்ப- “இவன் வான்வழி எழுந்து செல்வதற்கு யாது காரணம்?” என்று உலகத்தை ஈன்ற உமையவள் கேட்க; மன்னவன் இராமன் தூதன் மருந்தின்மேல் வந்தான் - “மன்னவர் குலத்துத் தோன்றிய இராமனின் தூதனாகிய இவன் மருந்தைக் கொண்டு போக வந்திருக்கின்றான்”; “வஞ்சர் தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்!” - “வஞ்சகராகிய அரக்கர்க்குரிய தென் இலங்கையினால் உளதாகிய தீமை இனித்தீர்வது திண்ணம்”; நன்னுதல்! நாளை நாமும் சேர்ந்து வெம்போர்காணுதும் என்றான் - “அழகிய நுதலை உடையவளே! நாளை நாமும் (தேவர்களுடன்) சேர்ந்து கொடிய போரைக் காண்போம்” என்று கூறினான் பரமன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When she who gave birth to the world asked, “Why has he risen up like this?”,
- he said, “The messenger of King Irāmaṉ has come for the medicine; the evil
- of Ilaṅkai, the southern city of the deceivers, will surely come to an end; let us too,
- lady of the fair brow, go together tomorrow and watch the fierce battle.”
What the poem says
Umā, the mother of the world, asks why Aṉumaṉ is flying north. Śiva tells her he is Irāmaṉ's messenger, come to fetch the healing herbs.
With his success, Śiva says, the evil coming from the demons' city of Ilaṅkai in the south is sure to end. He suggests that the two of them go with the other gods the next day to watch the decisive battle.