கம்பராமாயணம் 8796 · யுத்த 23.46

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி,
ஏம கூடத்தின் உம்பர் எய்தி நின்று, இறுதி இல்லாக்
காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான்;
நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றி உற்றான்.

பொருள் · Meaning in Tamil

நேமியின் விசையின் செல்வான் - சக்கரப்படைபோல விரைவாகச் செல்லுகின்ற அனுமன்; நாம ஆயிரம் யோசனைகள் கொண்டது நடுவு நீங்கி - பெயர்பெற்ற (ஒன்பதின்) ஆயிரம் யோசனைத் தொலைவு கொண்ட நடுவிடத்தைத் தாண்டி; ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் - ஏம கூட மலையின் மேல் அடைந்து நின்று; இறுதி இல்லாக் காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான்- முடிவில்லாத காமஇன்பத்தையே துய்க்கின்ற செல்வச் சிறப்பினை உடைய தேவர்களின் கூட்டத்தைக் கண்டான்; நிடதத்தின் நெற்றி உற்றான் - பின்பு நிடத மலையின் உச்சியை அடைந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Leaving behind the stretch between, of thousands of yojanas renowned,
  2. he came above Hemakūṭa, and saw the throng of wealthy gods
  3. who enjoy nothing but endless pleasure;
  4. going with the speed of the discus, he reached the brow of Niṭatam.

What the poem says

Aṉumaṉ follows the route Jāmbavān described. He crosses the nine thousand yojanas beyond the Himalaya and arrives above Hemakūṭa, where he sees a crowd of rich celestials who spend their lives in endless pleasure.

Moving as fast as Viṣṇu's discus, he goes on and reaches the summit of Niṣadha.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāma yōcaṉaikaḷ koṇṭatu āyiram naṭuvu nīṅki,
ēmakūṭattiṉ umpar eytiṉaṉ, iṟuti illāk
kāmamē nukarum celvak kaṭavuḷar īṭṭam kaṇṭāṉ;
nēmiyiṉ vicaiyiṉ celvāṉ niṭatattiṉ neṟṟi uṟṟāṉ.