கம்பராமாயணம் 8798 · யுத்த 23.48

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'யாவது நிலைமைத் தன்மை இன்னது, என்று 'இமையா நாட்டத்
தேவரும் தெரிகிலாத வடமலைக்கு உம்பர்ச் சென்றான்;
நாவலம் பெருந்தீவு என்னா நளிர்கடல் வளாக வைப்பில்
காவல் மூன்று உலகம் ஓதும் கடவுள் மா மரத்தைக் கண்டான்.

பொருள் · Meaning in Tamil

இமையா நாட்டத் தேவரும்- இமையாத விழிகளைப் பெற்ற தேவர்களும்; “நிலைமைத் தன்மை இன்னது” என்று யாவதும் தெரிந்திலாத - நிலையாக உள்ள தன்மையாவது எனச் சிறிதும் தெரியவியலாத; “வடமலைக்கு உம்பர் சென்றான்” - மேருமலைக்கு மேலே சென்று; நளிர்கடல் வளாக வைப்பில் - குளிர்ந்த கடலால் சூழப்பட்ட பூமியில்; நாவலம் பெருந்தீவு என்னா - நாவலம் பெருந்தீவு என்று; காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தைக் கண்டான் - காவலை உடைய மூன்று உலகத்தாரும் சிறப்பித்துக் கூறுவதற்குக் காரணமான தெய்வத்தன்மையை உடைய பெரிய நாவல் மரத்தைக் கண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He went over the Northern Mountain, of whose true nature
  2. not even the unblinking gods know anything at all,
  3. and saw the great divine tree for which, in the land ringed by the cool sea, the three guarded worlds
  4. speak of it as the Great Island of the Nāval.

What the poem says

Passing over Mēru, whose true nature even the gods cannot grasp, Aṉumaṉ sees the great divine Nāval tree, the rose-apple or jambu.

In Indian cosmology the central continent of the world, surrounded by ocean, is named Jambudvīpa, "Rose-apple Island," after this tree. In Tamil that is Nāvalam Peruntīvu. All three worlds know the land by its name.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'yāvatum nilaimait taṉmai iṉṉatu, eṉṟu 'imaiyā nāṭṭat
tēvarum terintilāta vaṭamalaikku umparc ceṉṟāṉ;
nāvalam perun tīvu eṉṉā naḷir kaṭal vaḷāka vaippil
kāval mūṉṟu ulakum ōtum kaṭavuḷ mā marattaik kaṇṭāṉ.