கம்பராமாயணம் 8799 · யுத்த 23.49

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்ன மா மலையின் உம்பர், உலகு எலாம் அமைத்த அண்ணல்
தன்னகர் அதனை நோக்கி, அதன் நடு நாப்பண் நாமப்
பொன்மலர்ப் பீடம் தன்மேல் நான்முகன் பொலியத் தோன்றும்
தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான்.

பொருள் · Meaning in Tamil

தருமம் போல்வான் - தருமதேவதை போன்றவனான அனுமன்; அன்னமாமலையின் உம்பர் - அந்த மேருமலையின் உச்சியில்; உலகு எலாம் அமைத்த அண்ணல் நல்நெடு நகரம் நோக்கி - உலகங்கள் அனைத்தையும் படைத்த பிரம தேவனுடைய சிறந்த நகரைப்பார்த்து; அதன் நடு நாப்பண் நாமப் பொன்மலர்ப் பீடம்தன்மேல் - அதன் நட்ட நடுவில் புகழ்பெற்ற பொன்மலர்ப்பீடத்தின் மேல்; நான்முகன் பொலியத் தோன்றும் - நான்முகக்கடவுள் பொலிவு பெற்றுத் தோன்றும் தன்மையைக்; கண்டு கையால் வணங்கினான் - கண்டு தன்கைகளால் வணங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On top of that great mountain, he looked upon the fine great city of the lord
  2. who made all the worlds, and saw how, in its very centre, upon the famed
  3. golden lotus seat, the Four-faced one appeared in splendour;
  4. and he who is like Dharma itself worshipped with his hands.

What the poem says

On the summit of Mēru, Aṉumaṉ sees the city of Brahmā, the creator. At its centre, on a golden lotus throne, sits the four-faced god in his glory.

Aṉumaṉ, the very picture of righteousness, salutes him with folded hands as he passes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa mā malaiyiṉ umpar, ulaku elām amaitta aṇṇal
nal neṭu nakaram nōkki, ataṉ naṭu nāppaṇ nāmap
poṉ malarp pīṭamtaṉmēl nāṉmukaṉ poliyat tōṉṟum
taṉmaiyum kaṇṭu kaiyāl vaṇaṅkiṉāṉ tarumam pōlvāṉ.