கம்பராமாயணம் 8800 · யுத்த 23.50

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தருவனம் ஒன்றில் வானோர் தலைத் தலை மயங்கித் தாழ,
பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க,
மரு விரி துளப மோலி மாநிலக் கிழத்தியோடும்
திருவொடும் இருந்த, மூலத் தேவையும் வணக்கம் செய்தான

பொருள் · Meaning in Tamil

தருவனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கித்தாழ - (பின்னர் அனுமன்) மரங்கள் நிறைந்துள்ள வனமொன்றில் தேவர்கள் இடந்தொறும் இடந்தொறும் கலந்து வணங்கி நிற்க, பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க - ஒப்பற்ற முனிவர்கள் வேத மந்திரங்களோடு புகழ்ந்து சொல்லும் ஒலி மிக்குத் தோன்ற; மருவிரிதுளவ மோலி மாநிலக்கிழத்தியோடும் - மணம் வீசும் துளவமாலை அணிந்த முடியினை உடையனாய்ப் பூதேவி யோடும்; திருவொடும் இருந்த மூலத்தேவையும் - சீதேவியோடும் இருந்த எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ள நாராயணனையும்; வணக்கம் செய்தான் - வணங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In a grove of trees, where the gods crowded together, bowing on every side,
  2. and the voices of peerless sages praising him with the Veda swelled,
  3. he worshipped also the First God, who sat with fragrant tulasi on his crown
  4. beside the Lady of the great Earth and with Tiru.

What the poem says

In a grove on Mēru, Aṉumaṉ sees Viṣṇu, the source of all things, wearing a crown wreathed in fragrant tulasi. He sits between his two consorts, Bhūdevī, goddess of the Earth, and Śrī, the goddess of fortune.

Gods crowd around in worship and sages chant his praises from the Vedas. Aṉumaṉ, too, bows to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taru vaṉam oṉṟil vāṉōr talaittalai mayaṅkit tāḻa,
poru aru muṉivar vētam pukaḻntu urai ōtai poṅka,
maru viri tuḷava mōli mā nilak kiḻattiyōṭum
tiruvoṭum irunta, mūlat tēvaiyum vaṇakkam ceytāṉ