கம்பராமாயணம் 8801 · யுத்த 23.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயதன் வடகீழ்ப் பாகத்து - (பின்னர்) அம்மேருவின் வட கிழக்கில், ஆயிரம் அருக்கர் ஆன்ற காய்கதிர் பரப்பி - ஆயிரம் சூரியர்களின் நிறைந்த ஒளிவீசும் கதிர்களைப் பரப்பிக் கொண்டு; ஐந்து கதிர்முகக் கமலம் காட்டி - ஐந்து ஒளிவாய்ந்த முகங்களாகிய தாமரைகளைக் காட்டிக் கொண்டு; தூயபேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த - தூயவான பெரிய உலகங்கள் மூன்றிலுள்ளோரும் அருச்சனையாகத் தூவிய மலர்களால் சூழப் பெற்று; சேயிழை பாகத்து எண்தோள் ஒருவனை வணக்கம் செய்தான் - செம்மையான அணிகலன்களை அணிந்த மனோன்மணியை இடப்பாகத்தில் கொண்டுள்ள எட்டுத் தோள்களை உடைய சதாசிவனைக் கண்டு வணக்கம் செய்தான்.
கயிலையில் உருத்திர மூர்த்தியை உமையாளொடும் வணங்கிய அனுமன் இங்கு சதாசிவனைக் கண்டு வணங்குகின்றான். ஐந்து முகங்களாவன, (1) அகோரம் (2) வாமனம் (3) தத்புருஷம் (4) ஈசானம் (5) சத்தியோசாதம் என்பன. “மேருவரையதற்கு நடுப்பிரமன் மூதூர் மிக்க மனோவதி, அதற்கு மேலைத்திக்கில், நாரணன் வாழ் வைகுண்டம், வட கீழ் பாலின் நாதன் அமர் சோதிட்கம்; திசைகள் எட்டும் சீரிய இந்திரன் முதலாம் எண்மர் தேயம்” (கந்தபுரா-அண்டகோசப்-30) என்ற பகுதி இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In its north-eastern part, spreading the burning rays of a thousand suns,
- showing five lotus faces full of light,
- ringed with the flowers that the pure great three worlds had strewn,
- he worshipped the one with eight arms who has the red-jewelled Lady as his half.
What the poem says
In the north-eastern part of Mēru, Aṉumaṉ bows to Śiva in his form as Sadāśiva. He shines like a thousand suns, has five radiant faces and eight arms, and shares his body with the goddess. Worshippers from all three worlds have heaped flowers around him.
The commentary notes that at Kailāsa Aṉumaṉ honoured Śiva as Rudra with Umā, while here he meets Śiva's five-faced form, and it lists the five faces. It also quotes the Kanta Purāṇam's map of Mēru: Brahmā's city at the centre, Viṣṇu's Vaikuṇṭha to the west, Śiva's abode to the north-east, and the eight guardians of the directions all around.