கம்பராமாயணம் 8802 · யுத்த 23.52

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சந்திரன் அனைய கொற்றத் தனிக்குடை தலைமேல் ஓங்க,
சுந்தர மகளிர் அங்கைச் சாமரை தென்றல் தூவ,
அந்தர வான நாடர் அடிதொழ, முரசம் ஆர்ப்ப,
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து, இறைஞ்சிப் போனான்.

பொருள் · Meaning in Tamil

சந்திரன் அனைய கொற்றத் தனிக்குடை தலையிற்று ஆக - சந்திரனைப் போன்ற வெற்றிமைந்த ஒப்பற்ற குடை தலைமீது நிழற்றவும்; சுந்தர மகளிர் அங்கைச் சாமரை தென்றல் தூற்ற - அழகிய பெண்கள் தம் அழகிய கையில் தாங்கிய வெண்சாமரைகள் தென்றல் (போலும்) இளங்காற்றை வீசவும்; அந்தரவானநாடர் அடி தொழமுரசம் ஆர்ப்ப - 'அந்தரம்' எனப்படும் வான் நாட்டில் உள்ள தேவர்கள் அடிவணங்கி நிற்க, முரசங்கள் ஆரவாரிக்க; இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சிப் போனான் - இந்திரன் அரியணையில் இருந்த தன்மையைக் கண்டு மகிழ்ந்து வணங்கிப் போனான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a peerless parasol of victory like the moon above his head,
  2. fair women's hands fanning him with whisks like a southern breeze,
  3. the dwellers of the sky-realm worshipping his feet and the drums resounding:
  4. seeing Intiraṉ seated so, he rejoiced, bowed, and went on.

What the poem says

Aṉumaṉ next sees Intiraṉ, Indra, king of the gods, enthroned in royal state. A moon-white parasol of victory shades him, beautiful women fan him with yak-tail whisks, the gods bow at his feet and drums are beaten.

Aṉumaṉ salutes him gladly and flies on.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cantiraṉ aṉaiya koṟṟat taṉik kuṭai talaiyiṟṟu āka,
cuntara makaḷir aṅkaic cāmarai teṉṟal tūṟṟa,
antara vāṉa nāṭar aṭi toḻa, muracam ārppa,
intiraṉ irunta taṉmai kaṇṭu uvantu, iṟaiñcip pōṉāṉ.