கம்பராமாயணம் 8803 · யுத்த 23.53

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பூஅலர் மரத்தைப் போல அந்தரம் விரிந்து பொங்கும்
தேவர்தம் இருக்கையான மேருவின் சிகர வைப்பில்
மூவகை உலகம் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும்
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரியக் கண்டான்.

பொருள் · Meaning in Tamil

பூ அலர் மரத்தைப் போர்ப்ப அந்தரம் விரிந்து பொங்கும் - மலர்கள் விரிந்து கற்பகத் தருவைச் சூழுமாறு போல விண்ணில் விரிந்து உயர்ந்திருக்கின்ற, தேவர்தம் இருக்கை ஆன மேருவின் சிகரவைப்பில் - தேவர்களின் இருப்பிடமான மேருமலையின் சிகரங்களாகிய இடங்களில்; மூவகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும் - மூவகையான உலகத்தைச் சூழ்ந்திருக்கின்ற முரண்பட்ட திசைகள் எட்டையும் முறைமையாகக் காத்து நிற்கின்ற; காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரியக் கண்டான் - திசைக் காவலர் எண்மரும் நிற்கின்ற தன்மையையும் தெளிவாகக் கண்டான். (அனுமன்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the peaks of Mēru, home of the gods, which spread and surge into the sky
  2. as blossoms cover a flowering tree,
  3. he saw clearly how the eight guardians stand who in due order keep
  4. the opposing quarters that encircle the three kinds of world.

What the poem says

The peaks of Mēru spread across the sky like blossoms covering a tree. On them Aṉumaṉ sees the eight guardian gods of the directions.

Each stands at his post, keeping watch over one quarter of the three worlds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pū alar marattaip pōrppa antaram virintu poṅkum
tēvartam irukkaiyāṉa mēruviṉ cikara vaippil
mūvakai ulakum cūḻnta muraṇ ticai muṟaiyiṉ kākkum
kāvalar eṇmar niṉṟa taṉmaiyum teriyak kaṇṭāṉ.