கம்பராமாயணம் 8804 · யுத்த 23.54

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அத்தடங் கிரியை நீங்கி, அத்தலை அடைந்த அண்ணல்,
உத்தர குருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி,
செற்றிய இருள் இன்று ஆக்கி விளங்கிய செயலை நோக்கி
வித்தகன், 'விடிந்தது 'என்னா, 'முடிந்தது என் வேகம் 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

அத்தடங்கிரியை நீங்கி அத்தலை அடைந்த வள்ளல் - அந்தப் பெரிய மேருமலையை விட்டு நீங்கி அப்பக்கத்தை அடைந்த அனுமன்; உத்தரகுருவை உற்றான் - உத்தர குரு என்ற போக பூமியை அடைந்தான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி - அங்கு, ஒளியை உடைய சூரியன் தன் கதிர்களைப் பரப்பி; செற்றிய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி - நெருங்கிய இருள் இல்லையாம்படி செய்து கொண்டு விளங்கிய செயலைப் பார்த்து; வித்தகன், “விடிந்தது!” என்னா, “முடிந்தது, என்வேகம்!” என்றான் - திறமைமிக்கவனாகிய அனுமன், பொழுது விடிந்து விட்டது என்று கருதி, “என் வேகம் முடிந்துவிட்டது” என வருந்திக் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Leaving that great mountain, the generous one reached the far side
  2. and came to Uttarakuru; seeing how the sun had planted its rays there
  3. and shone so that the dense darkness was gone,
  4. the able one said, “It is dawn! All my speed has come to nothing.”

What the poem says

Beyond Mēru, Aṉumaṉ reaches Uttarakuru, the blessed northern land of enjoyment. There he finds the sun shining and the darkness gone.

He thinks the night is over and that he has failed. He had hoped to bring the herbs back before dawn, and now it seems all his speed was in vain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1at taṭaṅ kiriyai nīṅki, attalai aṭainta vaḷḷal,
uttarakuruvai uṟṟāṉ; oḷiyavaṉ katirkaḷ ūṉṟi,
ceṟṟiya iruḷ iṉṟāka viḷaṅkiya ceyalai nōkki
vittakaṉ, 'viṭintatu 'eṉṉā, 'muṭintatu eṉ vēkam 'eṉṟāṉ.