கம்பராமாயணம் 8805 · யுத்த 23.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இணை இலாதான் - ஒப்பற்றவனாகிய அனுமன்; ஆதியான் உணரா முன்னம் அருமருந்து உதவி - ஆதிமூர்த்தியாகிய இராமன் மூர்ச்சை தெளிதற்கு முன்பே அரிய மருந்தினைக் கொண்டு போய்க் கொடுத்து; அல்லின்பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச் - இரவின் பாதியிலேயே அத்துன்பத்தை நீக்க எண்ணி இருந்த எனக்கு; சோதியான் உதயம் செய்தான் - பேரொளியை உடைய கதிரவன் உதயஞ் செய்து விட்டான்; உற்றது ஓர் துணிதல் ஆற்றேன் - இனிப் பொருந்திய செயல் இன்ன தென்பதைத் துணிய இயலாதவனாக இருக்கின்றேன்; “ஏது யான் செய்வது?” என்னா இடர் உற்றான் - (இப்போது) “யான் செய்ய வேண்டுவது எது?” என்று வருத்தமடைந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “For me, who meant to bring the rare medicine before the First One woke
- and drive away that sorrow within half the night,
- the Lord of Light has risen; I cannot settle on what is fitting now;
- what am I to do?” So the peerless one fell into distress.
What the poem says
Aṉumaṉ despairs. He had planned to bring the medicine and end the army's suffering within half a night, before Irāmaṉ, the First Being, came round from his faint.
Now the sun seems to have risen, and he cannot decide what to do next.