கம்பராமாயணம் 8806 · யுத்த 23.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தவத்து மிக்கான் - தவத்தால் சிறந்தவனும்; கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான் - காற்றின் வேகம் குறையுமாறும் திசையின் தொலைவு சுருங்குமாறும் செல்லுகின்ற விரைவினை உடையவனுமாகிய அனுமன்; கதிரின் செல்வன் மேல் திசை எழுவான் அல்லன் - கதிரினைச் செல்வமாக உடைய சூரியன் மேற்குத் திசையில் எழுகின்ற இயல்புடையவன் அல்லன்; விடிந்ததும் அன்று; மேருமாற்றினன் - இப்போது விடியற்காலமுமில்லை; மேருவில் தன் செலவை மாற்றினவனாய்; வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் சாற்றினர் - வடபுறத்தில் (உள்ளார்க்கு மேற்குத்திசையில்) தோன்றும் என்பது, வேதம் பயின்றவர்கள் கூறியுள்ளனர்; என்ன, துன்பம் தவிர்ந்தனன் - என்று எண்ணித் துன்பம் தணிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He of such speed that the wind falls short and the quarters shrink as he goes thought: “The lord of rays
- is not one to rise in the west; nor is this the dawn; turning his course at Mēru,
- he appears in the northern region: so those versed
- in the Vedas have declared”; and thinking so, he of great austerity was freed of his distress.
What the poem says
Aṉumaṉ calms himself by remembering what learned men say about the sky. The sun he can see is in the west, and the sun never rises in the west, so this cannot be dawn.
Traditional astronomy holds that the sun circles Mount Mēru. While it is night in the south where Ilaṅkai lies, the sun is shining on the lands north of Mēru. The night is not over, and he still has time.