கம்பராமாயணம் 8807 · யுத்த 23.57

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இருவரே தோன்றி, என்றும் ஈறுஇலா ஆயுள் எய்தி - (ஆண் பெண் என்ற) இருவரே பிறந்து, என்றும் முடிவிலாத ஆயுளைப் பெற்று; ஒருவரோடு ஒருவர், உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி - ஒருவரோடு ஒருவர் உள்ளமும் உயிரும் ஒன்றே என்னுமாறு ஒற்றுமை உடையராய்; பொரு அரு இன்பம் துய்த்து புண்ணியம் புரிந்தோர் வைகும் - ஒப்பற்ற இன்பம் துய்த்துக் கொண்டு, புண்ணியச் செயல்களைச் செய்தோர் பொருந்தி இருப்பதான; திருஉறை கமலம் அன்ன நாட்டையும் தெரியக் கண்டான் - திருமகள் வாழும் தாமரை மலர்போன்ற உத்தர குரு நாட்டையும் கண்களால் தெரியக் கண்டான்.

புண்ணியப் பயன்காரணமாக ஆண், பெண் என இரு பாலராகத் தோன்றி, 'ஒருயிரும் ஈருடலும்' என்னுமாறு உள்ளமொத்து வாழ்கின்ற வாழ்வினராயும், முடிவிலா ஆயுளும், ஒப்பற்ற இன்பமும் பெற்று திருமகள் தங்கியுள்ள தாமரை எனும் படித்தான உத்தரகுரு நாட்டில் வாழ்வர் அத்தகைய உத்தர குருவை அனுமன் தன் கண்களால் காணப் பெற்றான் என்பதாம். “திருவின் அருந்தவ முடித்தோர் உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய” (சிலப்-மனையறம்-9-10) என்பதும் இதற்கு, “அறத்தானாகிய பொருளால் தலைப்படு தானத்தைச் செய்தோர் எய்தும் உத்தரகுருவினை” என்ற அதன் உரையும் காணத்தக்கது.

இதனைக் 'காம பூமி' எனவும், 'தானப் பயனாற் பெறும் போகபூமி' எனவும் கூறுவர் (சீவக - 189)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He saw clearly too the land like the lotus where Tiru dwells,
  2. where those who did merit live: born only as pairs, attaining a life that never ends,
  3. one with the other, heart and life become one,
  4. enjoying a bliss beyond compare.

What the poem says

Aṉumaṉ looks down on Uttarakuru, a paradise as lovely as the lotus where the goddess Śrī lives. Those who earned great merit in earlier lives are reborn there.

The commentary explains that people there are born in pairs, man and woman, live for ages, and share one heart and one life between two bodies, enjoying perfect happiness. It cites the Cilappatikāram and the Cīvaka Cintāmaṇi, which also describe Uttarakuru as a land of pleasure earned by generous giving.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iruvarē tōṉṟi eṉṟum īṟu ilā āyuḷ eyti,
oruvarōṭu oruvar, uḷḷam uyiroṭum oṉṟē āki,
poru arum iṉpam tuyttu, puṇṇiyam purintōr vaikum
tiru uṟai kamalam aṉṉa nāṭṭaiyum teriyak kaṇṭāṉ.