கம்பராமாயணம் 880 · பால 13.76

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொன்தொடி மகளிர் ஊரும் பொலன்கொள் தார் புரவி வெள்ளம்
சுற்றுறு கமலம் பூத்த தொடுகடல் திரையில் செல்லக்,
கொற்றம் வேள் மன்னர் செங்கைப் பங்கயம் குழாங்கள் கூம்ப,
மற்று ஒரு கதிரோன் என்ன மணிநெடும் தேரில் போனான்.

பொருள் · Meaning in Tamil

பொன் தொடி மகளிர் - பொன் வளையல் அணிந்த பெண்கள்; ஊரும் - ஏறிச் செல்லும்; பொலன் கொள் - பொன்னாலாகிய; தார்ப் புரவி வெள்ளம் - கிண்கிணி மாலையணிந்த குதிரைகளின் கூட்டம்; சுற்று உறு கமலம் - சுற்றிலும் தாமரைப் பூக்கள்; பூத்த - மலர்ந்துள்ள; தொடுகடல் - தோண்டப் பெற்ற கடலின்; திரையின் செல்ல - அலைகளைப் போலச் செல்ல; கொற்றவேல் மன்னர் - வெற்றி பொருந்திய வேல் ஏந்திய அரசர்களின்; செங்கை பங்கயக் குழாங்கள் - சிவந்த கைகளாகிய தாமரைக் கூட்டங்கள்; கூம்ப - குவிய; மற்றொரு கதிரோன் என்ன - வேறொரு சூரியனைப் போல; மணி நெடுந் தேரில் - மணிகள் கட்டிய பெரிய தேரிலே; போனான் - ஏறிச் சென்றான் (தசரதன்).

இயற்கைக்கு மாறாகத் தாமரை குவியச் செய்தலானும், மண்ணிடைச் செல்லுதலானும் மற்றொரு கதிரோன் என்றார். தாமரை மலர்களை மலர்விக்கும் சூரியனைவிட வேறுபட்டுத் தாமரை மலர்களைக் குவிக்கும் ஒரு சூரியன் இத்தசரதனுக்கு ஒப்பாகும் என்றார். - வேற்றுமையணி. மகளிரையுடைய புரவி வெள்ளம் கமலம் பூத்த கடலின் அலைக்கு உவமையாயிற்று. கமலம் பூத்த கடல் திரை - இல்பொருள் உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The flood of horses with golden bell-garlands, ridden by women wearing golden bangles,
  2. moved on like the waves of the dug-out sea where lotuses bloom all around;
  3. the lotus-clusters that were the red hands of kings with conquering spears closed up,
  4. and he went in his tall jewelled chariot like a second sun.

What the poem says

Tacarataṉ has set out from Ayōttī with his whole court for Mithila, where Irāmaṉ is to marry Cītai. Here the king rides at the head of the procession.

The women on horseback ride in a moving flood that looks like waves full of lotuses, a sight that does not exist in nature. The sea is "dug" because, in legend, the sons of King Cakaraṉ dug it out. The king is "another sun", but a contrary one. The real sun makes lotuses open. This sun makes the lotus-hands of the kings close as they join their palms to salute him, and it travels on the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṟṟoṭi makaḷir ūrum polaṉ koḷ tārp puravi veḷḷam
cuṟṟuṟu kamalam pūtta toṭu kaṭal tiraiyiṉ cellak,
koṟṟa vēl maṉṉar ceṅ kaip paṅkayak kuḻāṅkaḷ kūmpa,
maṟṟu oru katirōṉ eṉṉa maṇi neṭun tēril pōṉāṉ.