கம்பராமாயணம் 8811 · யுத்த 23.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாய்ந்தனன் பாய்தலோடும் - (மருத்துமலையைத் தெரிந்த அனுமன்) அந்த மலைமீது பாய்ந்தான், அங்ஙனம் பாய்ந்த உடனே; அம்மலை பாதலத்துச் சாய்ந்தது - அம் மருத்துமலை பாதலத்தில் சாய்ந்தது; காக்கும் தெய்வம்சலித்தன - (அம் மருந்துகட்குக்) காவலாக இருந்த தேவதைகளும் மனம் தளர்ந்தன; கடுத்து வந்து காய்ந்தது - (பிறகு தேறி) விரைந்துவந்து சினங் கொண்டு; “நீதான் யாவன்? கருத்து என்கொல்? கழறுக!” என்ன - (அனுமனைப் பார்த்து) “நீ யாவன்? (உன்) எண்ணம் யாது? சொல்லுக!” என்று கேட்க; ஆய்ந்தவன் உற்ற தன்மை அவற்றினுக்கு அறியச் சொன்னான் - ஆராயும் தன்மை உள்ளவனாகிய அனுமன் தான் வந்ததற்குரிய காரணத்தை அத்தேவதைகள் அறிந்து கொள்ளுமாறு கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He leapt; and as he leapt, that mountain sank down
- toward the underworld; the guardian deities were shaken; they came in haste
- and blazed in anger: “Who are you? What is your purpose? Speak!” they said;
- and the wise one told them plainly all that had happened.
What the poem says
Aṉumaṉ lands on the medicine mountain, and his weight pushes it down toward the underworld. The guardian deities Jāmbavān warned of are shaken. Then they rush at him in anger and demand to know who he is and why he has come.
Aṉumaṉ, always thoughtful, does not fight. He calmly explains his mission.