கம்பராமாயணம் 8813 · யுத்த 23.63

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால்
சிங்குமால் காலம்’என்று உணரும் சிந்தையான்
அங்கு அதை வேரொடும் அங்கை தாக்கினான்
பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான்.

பொருள் · Meaning in Tamil

இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால் - “இவ்விடத்தில் நின்று இன்னவை நமக்குத் தேவையான மருந்துகள் என்று ஆராய்வோமானால்; காலம் சிங்குமால் என்று உணரும் சிந்தையான் - காலம் கழியும் என்று உணர்ந்த மனத்தினனான அனுமன்; அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான் - அப்போது அம்மலையினை வேருடன் அழகிய கரத்தில் தாங்கிக் கொண்டு; பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான் - விரிந்து பரந்த ஆகாய வழியே விரைந்து செல்பவனானான்.

சிங்கும் - குறையும்; கழியும், “சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்து” (சிலப். பதி.47) சாம்பவன் கூறியபடி நால்வகை மருந்துகளையும் இனங் கண்டு எடுப்பது காலதாமதத்திற்கு வழி வகுக்கும் என எண்ணிய அனுமன் அம் மருந்துமலையையே வேருடன் எடுத்துக்கொண்டு விண்வழியே விரைந்தான் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “If I stay here and work out which of these are the medicines,
  2. the time will run out,” so his mind perceived;
  3. there and then he held it, roots and all, in his hand,
  4. and went swiftly through the vast swelling sky.

What the poem says

This verse begins a new metre. Aṉumaṉ realises that picking out the four herbs one by one would waste precious time.

So he carries off the whole mountain by its roots in one hand and flies back through the sky. The commentary explains the rare word "ciṅkum" as "will dwindle" and cites a parallel in the Cilappatikāram.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṅku niṉṟu iṉṉaṉa maruntu eṉṟu eṇṇiṉāl
ciṅkumāl kālam’ eṉṟu uṇarum cintaiyāṉ
aṅkuatu vēroṭum aṅkai tāṅkiṉāṉ
poṅkiya vicumpiṭaik kaṭitu pōkuvāṉ.