கம்பராமாயணம் 8814 · யுத்த 23.64

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயிரம் யோசனை அகன்று மீது உயர்ந்து
ஆயிரம் யோசனை சூழ்ந்தது அம்மலை
'ஏ’எனும் மாத்திரத்து ஒரு கை ஏந்தினான்
தாயினன் உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான்.

பொருள் · Meaning in Tamil

உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான் - உலகம் முழுமையும் பரவிய புகழை உடையவனான அனுமன்; ஆயிரம் யோசனை அகன்று மீஉயர்ந்து - ஆயிரம் யோசனை அளவு விரிந்தும், ஆயிரம் யோசனை அளவுமேல் உயர்ந்தும்; ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம்மலை - ஆயிரம் யோசனை அளவு தரையில் ஆழ்ந்தும் உள்ளதாகிய அச்சஞ்சீவி மலையை; “ஏ” எனும் மாத்திரத்து, ஒரு கை ஏந்தினான் தாயினன் - 'ஏ' எனும் காலத்திற்குள் ஒரு கையில் ஏந்திக் கொண்டு தாவிச் சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A thousand yojanas wide, rising high above,
  2. and sunk a thousand yojanas deep was that mountain;
  3. in the time it takes to say “Ē!” he lifted it in one hand
  4. and leapt away, he whose fame has spread over all the world.

What the poem says

The poet stresses the size of the medicine mountain, also called Sañjīvi: a thousand yojanas across, a thousand high, and rooted a thousand deep.

Aṉumaṉ, whose fame fills the world, lifts it in one hand quicker than one can say a syllable, and springs away with it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram yōcaṉai akaṉṟu mī uyarntu
āyiram yōcaṉai āḻntatu am malai
'ē’ eṉum māttirattu oru kai ēntiṉāṉ
tāyiṉaṉ ulaku elām tavaḻnta cīrttiyāṉ.