கம்பராமாயணம் 8815 · யுத்த 23.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அத்தலை, அன்னவன் அனையன் ஆயினான் -அவ்விடத்து அவ் அனுமன் அத்தன்மையன் ஆயினான் (அக்காலத்தில்; இத்தலை, இருவரும் விரைவின் எய்தினார் - இங்கே, (போர்க்களத்தில் சாம்பன் வீடணன் என்ற இருவரும், விரைவாக இராமனை அடைந்தவராய்; கைத் தலத்தால் அடி வருடும் காலையில் - தம் கைகளால் அவனுடைய திருவடிகளைப் பற்றி வருடும் போது; உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம் அரோ - உத்தமனாகிய அவ்விராமனுக்கு நிகழ்ந்ததைக் கூறுவோம்.
உணர்த்துவாம் - கவிவெளிப்பட்டுக் கற்போருக்குக் கதைத் தொடர்பினையும், காட்சி மாற்றத்தினையும் உணர்த்துதல். மலையை ஏந்தி அனுமனைப் புறப்பட வைத்து விட்டுக் கவி காட்சியை மாற்றிப் போர்க்களம் காட்டும். இப்போக்கு நாடகத்தன்மை வாய்ந்த நலமுடையதாதல் காண்க. அனுமன் போன வழியினையும், பயணத்தையும் விரிவாகக் கூறிய பின் திரும்பவும் அவன் அவ்வழியே வருதலை விவரிக்க வேண்டுவதில்லையாகலானும், போர்க்களத்தில் நடக்கும் நிகழ்ச்சித் தொடர்பினைக் கொண்டு செலுத்த வேண்டுதலானும் இவ்வுத்தியைக் கவி பின்பற்றுதல் கண்டு இன்புறத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- There, that one had become as we have told;
- here, the two of them had come quickly,
- and while they stroked his feet with their hands,
- we shall tell what befell the Noble One.
What the poem says
The poet steps forward in his own voice to change the scene. Aṉumaṉ is on his way back with the mountain. Meanwhile Jāmbavān and Vīṭaṇaṉ have hurried back to Irāmaṉ and are gently rubbing his feet to revive him.
The commentary admires this as a dramatic technique. Having described the outward journey in full, the poet does not need to repeat it for the return. He cuts back to the battlefield to keep the story moving.