கம்பராமாயணம் 8816 · யுத்த 23.66

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விண்டன மடந்தையர் மனத்தை வேரொடும்
கண்டன களவு அறும் கருணைத்து ஆம் எனக்
கொண்டன கொடுப்பன வரங்கள் கோள் இலா
புண்டரீகம் துணை நயனம் பூத்தன.

பொருள் · Meaning in Tamil

வண்டு ஆன மடந்தையர் மனத்தை வேரொடும் கண்டன - (தம்மீது படிந்திருக்கும்) வண்டு எனும்படி, மகளிரின் உள்ளத்தை வேரோடு கொண்டனவும் கொளவரும் கருணைதாம் எனக் கொண்டன - (எல்லா உயிர்களும் முகந்து) கொள்ளும்படி எழுகின்ற கருணையே தாம் என்னும்படி அதனை நிரம்பக் கொண்டனவும்; வரங்கள் கொடுப்பன - வரங்களைத் தருவனவும் ஆகிய; கோள்இலாப் புண்டரீகத்துணை தருமம் பூத்தென - மாறுபாடில்லாத தாமரைமலர் போன்ற விழியிணைகள் தருமம் போன்று மலர்ந்து திகழ்ந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The two flawless lotuses, which had seized to the root the hearts of women
  2. who are like bees, which held a compassion
  3. rising for all to draw upon, which bestow boons,
  4. opened as if Dharma itself had blossomed.

What the poem says

Irāmaṉ opens his eyes. The poet describes them as a pair of perfect lotuses. Women's hearts cling to them like bees to a flower. They are so full of compassion that every creature can draw on it, and they grant boons to those who seek them.

When they open it is as though righteousness itself has come into bloom.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇṭu aṉa maṭantaiyar maṉattai vēroṭum
kaṇṭaṉa koḷa varum karuṇaitām eṉak
koṇṭaṉa koṭuppaṉa varaṅkaḷ kōḷ ilāp
puṇṭarīkat tuṇai tarumam pūtteṉa.