கம்பராமாயணம் 8818 · யுத்த 23.68

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஏவிய காரியம் இயற்றி எய்தினை
நோவிலை; வீடணா! என்று நோக்கிப் பின்
சாவு அரும் பெரும்புகழ்ச் சாம்பன்தன்னை நீ
ஆவி வந்தனை கொல்? 'என்று அருளினான் அரோ.

பொருள் · Meaning in Tamil

“வீடணா! ஏவிய காரியம் இயற்றி எய்தினை? - (கண் விழித்துப் பார்த்த இராமன்) வீடணா யான் ஏவிய (உணவு கொணர்வதாகிய) காரியத்தைச் செய்து வந்தாயோ?; நோவிலை? என்று நோக்கி - (ஆகவே பிரமாத்திரத்தினால் எய்திய நோவிலை யன்றோ? என வீடணனை நோக்கி வினவியபின்; தா அரும் பெரும் புகழ்ச் சாம்பன் தன்னை - குற்றமற்ற பெரும்புகழையுடைய சாம்பவன் தன்னையும் பார்த்து; “நீ ஆவி வந்தனை கொல்?” என்று அருளினான் அரோ - “நீ உயிர் வரப் பெற்றனையோ?” என்று கேட்டருளினான் இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “You have done the task I sent you on and have returned;
  2. you are not hurt, Vīṭaṇā?” he said, looking at him; and then
  3. to Cāmpaṉ of great and spotless fame: “Has your life
  4. come back to you?” so he graciously asked.

What the poem says

Irāmaṉ's first words are about others. He asks Vīṭaṇaṉ whether he came back safely from the errand of fetching food, and so escaped the Brahmā weapon unhurt.

Then he turns to Jāmbavān, who was struck down with the rest, and asks kindly whether he has come back to life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ēviya kāriyam iyaṟṟi eytiṉai
nōvilai; vīṭaṇā! eṉṟu nōkkip piṉ
tā arum perum pukaḻc cāmpaṉtaṉṉai nī
āvi vantaṉaikol? 'eṉṟu aruḷiṉāṉ arō.