கம்பராமாயணம் 882 · பால 13.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சங்கமும் - சங்க வாத்தியமும்; பணையும் - புல்லாங்குழலும்; கொம்பும் - ஊதுகொம்புகளும்; தாளமும் - கைத்தாளமும்; காளத்தோடு - எக்காளமும்; மங்கல பேரி - மங்கலத்தைத் தெரிவிக்கும் பேரிகையும்; செய்த பேரொலி - எழுப்பிய பெரிய ஓசையானது; மழையை - மேகத்தில் தோன்றும் இடியை; ஓட்ட - துரத்தவும்; தொங்கலும் - பூமாலைகளும்; குடையும் - குடைகளும்; தோகைப் பிச்சமும் - மயிலின் தோகையால் செய்த பிச்சங்களும்; சுடரை ஓட்ட - வெயிலை மறைக்கவும்; திங்கள் வெண்குடை - சந்திரன் வெண்கொற்றக் குடையை; கண்டு ஓட - கண்டு ஓடவும்; தேவரும் மருள - தேவர்களும் மயங்கும்படி; சென்றான் - (தசரதன்) மேன்மையாகப் போனான்.
தொங்கல் முதலியன அரசர் செல்லும்போது பிடிக்கப்படும் விருதுகள். பிச்சம் - மயில்பீலியால் செய்யப் பெற்ற ஒன்று. வெண்கொற்றக் குடையின் நிறமும், குளிர்ச்சி தரும் பெருமையும் தனக்கு இல்லையே என்று சந்திரன் வெட்கப்பட்டு ஓடினான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Conch and pipe and horn and cymbal, together with the trumpet
- and the auspicious kettledrum, made a great din that chased away the thunder;
- garlands, parasols and peacock-feather fans chased away the sun's glare;
- the moon fled on seeing the white parasol; and, while the gods themselves marvelled, he went on.
What the poem says
The king's procession moves with full royal music and insignia. The noise of the instruments drowns out the thunder of the clouds, and the hanging garlands, parasols and peacock-feather fans carried over him shut out the sun.
The white parasol is the emblem of a righteous king. The moon runs away when it sees it, ashamed that it has neither the parasol's whiteness nor its power to give cool shade to the whole world.