கம்பராமாயணம் 883 · பால 13.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இந்திர திருவன் - இந்திரனது செல்வம் போன்ற செல்வத்தைக் கொண்டவனாகிய தசரதன்; செல்ல - செல்லுகையில், மந்திர கீதம் ஓதை - வேத மந்திரங்களாகிய பாட்டோசையும்; வலம்புரி முழங்கும் ஓதை - வலம்புரிச் சங்குகள் முழங்குகின்ற ஓசையும்; அந்தணர் ஆசி ஓதை - அந்தணர்களின் வாழ்த்து ஒலியும்; ஆர்த்தெழு முரசின் ஓதை - ஆரவாரித்து எழுகின்ற முரசங்களின் முழக்கமும்; கந்து கொல் - கட்டுத் தறியை முறிக்கின்ற; களிற்றின் ஓதை - யானைகள் பிளிறும் ஓசையும், கடிகையர் கவிதை ஓதை - நாழிகைக் கணக்கரின் நாழிகைப் பாட்டின் ஓசையும் (ஆகிய இவை); திசைகள் எல்லாம் எழுந்தன - திக்குகள் எங்கும் எழுந்தன.
மந்திர கீதம் - சாமகானம். நாழிகைக் கணக்கர் நாழிகையைப் பாடல் வாயிலாகக் குறிப்பர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sound of chanted mantras, the sound of right-whorled conches booming,
- the sound of the brahmins' blessings, the sound of drums rising with a roar,
- the sound of elephants that break their tethering posts, the sound of the time-keepers' verses:
- as he of Intiraṉ's splendour went on, these rose in every direction.
What the poem says
A list of the sounds around Tacarataṉ, whose wealth is compared to that of Intiraṉ, king of the gods, as he travels.
The "chanted mantras" are the sung verses of the Sāma Veda. The time-keepers were court officials who announced each nāḻikai, a unit of about twenty-four minutes, in verse.