கம்பராமாயணம் 884 · பால 13.80
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நோக்கிய திசைகள் எல்லாம் - பார்க்கின்ற திக்குகள் யாவும்; தன்னையே நோக்கிச் செல்லும் - (அரசனது பார்வை எப்போது தன் மீது பதியும் என்ற கருத்துடன்) தன்னையே பார்த்துக் கொண்டு செல்லும்; கழல் வீக்கிய கால்வேந்தர் - காலில் வீரக்கழல் அணிந்துள்ள அரசர்கள்; விரிந்த கை மலர்கள் கூப்ப - மலர்ந்த தாமரை போன்ற தம் கைகள் கூப்பவும்; தாக்கிய களிறும் - (ஒன்றோடு ஒன்று) மோதிக் கொண்டு செல்லும் யானைகளும்; தேரும் புரவியும் - தேர்களும் குதிரைகளும்; படைஞர் தாளும் - காலாட்படைகளின் பாதங்களும்; ஆக்கிய - மேலே எழுப்பிய; தூளி - புழுதிகள்; விண்ணும் - வானத்தையும்; மண்ணுலகு ஆக்க - மண்ணுலகமாக்கவும்; போனான் - சென்றான். தசரத மன்னவனின் பார்வை விழும்போது எல்லாம் அவனையே காண்கின்ற மன்னவரின் கைகள் குவிகின்றன என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Every direction he looked toward kept its eyes on him alone as it moved;
- kings with warrior anklets bound on their legs folded their open flower-hands;
- the dust raised by jostling elephants, chariots, horses and the feet of foot-soldiers
- turned even the sky into earth; and so he went on.
What the poem says
Wherever Tacarataṉ turns his eyes, the people there are already watching him, hoping his glance will fall on them. The vassal kings, who wear the anklets of warriors, join their lotus-like hands in salute each time his gaze reaches them.
So much dust rises from the marching army that the sky itself seems to become a second ground.