கம்பராமாயணம் 885 · பால 13.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீரரும் - காலாள் வீரர்களும்; களிறும் தேரும் - யானையும் தேர்களும்; புரவியும் மிடைந்த சேனை - குதிரையும் (என்ற நால்வகைப் படையும்) நெருங்கியுள்ள சேனைகளும்; பெயர்வது ஆக - (இந்த இடத்தைவிட்டு) அப்பாலே செல்வதென்றாலும்; பேர்வு - நிலைபெயர்ந்து செல்வதற்கு; இடம் இல்லை - வேறொரு இடமில்லை; மற்று ஓர் உலகு இல்லை - (ஏனென்றால்) வேறொரு வெற்றுலகும் இல்லையாதலால்; நீர் உடைய ஆடையாளும் - கடலாகிய நீரை ஆடையாக உடைய பூமிதேவியும் (அந்த நாற்படைகளின் பாரத்தைப் பொறுக்கமாட்டாமல்); முதுகை நெளித்தனள் - தன் முதுகை நெளித்துக் கொடுத்தாள்; என்றால் - என்றால் (தசரதன்); பார்பொறை - பூமியின் சுமையை; நீக்கினான் - போக்கினான்; என்று உரைத்தது - என்று அறிவுடையோர் கூறியது; எப் பரிசு - எவ்வாறு பொருந்தும்?
நால்வகைச் சேனைகளும் அசைந்து கொடுக்கவும் இடமில்லை; மாற்றி வைக்கவும் மற்றோர் உலகமில்லை. ஆதலால் சுமை தாங்காது பூமி நெளிந்தாள் என்றால் அரசன் பூமிபாரம் தீர்த்தான் என்று கூறல் எவ்வாறு பொருந்தும்? என்பது வஞ்சப் புகழ்ச்சியாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The army, crowded with warriors, elephants, chariots and horses,
- had no room to shift and no other world to go to, and could not be moved;
- if even she whose garment is the sea twisted her back under it,
- how can it be said that he relieved the earth of its burden?
What the poem says
The army is so huge that it has no room to move, and there is no other world to shift it to. The earth goddess, whose garment is the sea, bends her back under its weight.
People praise Tacarataṉ as the king who lifted the earth's burden by destroying its wicked rulers. The poet asks how that can be true when his own army now crushes her. This is praise disguised as blame: the "complaint" only shows how vast his power is.