கம்பராமாயணம் 8820 · யுத்த 23.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய
பேதையேன் சிறுமையால் உற்ற பெற்றியை
யாது என உணர்த்துகேன்! உலகம் ஓதிடும்
காதை வன் பழியொடும் திருத்திக் காட்டினேன்.
பொருள் · Meaning in Tamil
சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய - சீதை என்ற ஒருத்தி காரணமாக மனம் வருத்திய; பேதையேன், சிறுமையால் உற்றபெற்றியை - அறிவிலியாகிய யான் என் கீழ்மையால் அடைந்த தன்மையை; யாது என உணர்த்துகேன்! - என்னவென்று சொல்லுவேன்? உலகொடு ஈர்வுறாக் காதை - உலகத்தோடு பொருந்தாத (இந்தஎன்) வாழ்க்கைக் கதையை; வன்பழியொடும் நிறுத்திக் காட்டினேன் - கொடிய பழியோடும் பொருந்துமாறு செய்து காண்பித்தேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “How can I describe what has come to me, a fool
- whose heart pined for one woman called Cītai,
- through my own smallness? This story of mine, which the world will never let go,
- I have set down and shown to all, bound up with harsh disgrace.”
What the poem says
Irāmaṉ turns on himself. Out of longing for one woman, Cītai, he has brought ruin on his brother and his allies.
He calls himself foolish and small. The story of his life, which the world will remember, will now always carry this shame.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cītai eṉṟu oruttiyāl uḷḷam tēmpiya
pētaiyēṉ ciṟumaiyāl uṟṟa peṟṟiyai
yātu eṉa uṇarttukēṉ! ulakoṭu īrvuṟāk
kātai vaṉ paḻiyoṭum niṟuttik kāṭṭiṉēṉ.