கம்பராமாயணம் 8821 · யுத்த 23.71

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"மாயை இம்மான் ” என எம்பி வாய்மையால்
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன்
போயினென் பெண் உரை மறாது; போகலால்
ஆனது இப்பழியுடை மரணம் அன்பினீர்!

பொருள் · Meaning in Tamil

அன்பினீர் - அன்புடையவர்களே! “மாயை இம்மான்” என எம்பி, வாய்மையான் சொன்ன - “மாயமான்இது” என என் தம்பி உண்மையாகக் கூறிய; தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன் - தூய்மையான உறுதிமிக்கவாகக் கூறிய சொற்களைக் கொள்ளாமல்; பெண் உரைமறாது போயினென் - பெண் உரை மறுக்காமல் அந்த மானின்பின்னே போயினன்; போகலால், இப்பழியுடை மரணம் ஆயது - அங்ஙனம் போனதால் இப்பழியுடைய மரணம் உண்டாயிற்று.

மாயமானென இலக்குவன் எச்சரித்ததை 3288, 3296, 3298, 3300 எனும் பாடல்கள் வழி காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “When my brother said, ‘This deer is an illusion,’ I would not take
  2. the pure, sound counsel he spoke in truth;
  3. I went, not refusing a woman's word; and because I went,
  4. this death full of disgrace has come about, my loving friends!”

What the poem says

Irāmaṉ traces the disaster back to its beginning. When the golden deer appeared in the forest, Ilakkuvaṉ warned him it was a demon's trick, but Irāmaṉ ignored him and went after it because Cītai asked him to.

That choice led to her abduction, the war and now his brother's death. The commentary refers the reader back to the earlier verses where Ilakkuvaṉ gave his warning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"māyai im māṉ” eṉa empi vāymaiyāṉa
tūyaṉa uṟutikaḷ coṉṉa col koḷēṉ
pōyiṉeṉ peṇ urai maṟātu; pōkalāl
āyatu ip paḻiyuṭai maraṇam aṉpiṉīr!