கம்பராமாயணம் 8823 · யுத்த 23.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1"தேவர்தம் படைக்கலம் தொடுத்து தீயவன்
சாவது காண்டும் " என்று இளவல் சாற்றவும்
ஆவதை இசைந்திலன் அழிவது என்வயின்
மேவுதல் உறுவது ஓர் விதியின் வெம்மையால்.
பொருள் · Meaning in Tamil
இளவல், “தேவர் தம் படைக்கலம் தொடுத்து - என்தம்பி, 'பிரமதேவர்தம் படைக்கலத்தைத் தொடுத்து; தீயவன் சாவது காண்டும்” என்று சாற்றவும் - தீயவனாகிய இந்திரசித்து சாவதைக்காண்போம்' என்று கூறவும்; என்வயின் அழிவது மேவுதல் உறுவது ஓர் விதியின் வெம்மையால் - என்னிடத்தில் அழிவு பொருந்துதற்குக் காரணமான ஒரு விதியின் கொடுமையால்; ஆவதை இசைந்திலென் - பொருத்தமான அச்செயலை உடன்படாது போயினேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Though my younger brother said, ‘Let us loose the weapon of the gods
- and see the wicked one die,’
- I did not agree to what was fitting, through the cruelty
- of a fate bent on bringing ruin upon me.”
What the poem says
Irāmaṉ recalls another missed chance. Earlier, Ilakkuvaṉ wanted to use Brahmā's weapon against Intiracittu and finish him. Irāmaṉ refused, because using that weapon would have destroyed far more than the one enemy.
Now he blames a cruel fate for his refusal, since Intiracittu has turned that same weapon on them.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"tēvartam paṭaikkalam toṭuttu tīyavaṉ
cāvatu kāṇṭum" eṉṟu iḷaval cāṟṟavum
āvatai icaintileṉ aḻivatu eṉvayiṉ
mēvutal uṟuvatu ōr vitiyiṉ vemmaiyāl.