கம்பராமாயணம் 8824 · யுத்த 23.74

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"நின்றிலென் உடன் எறிபடைக்கு நீதியால்
ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன்;
பொன்றினர் நமரெலாம்; இளவல் போயினான்;
வென்றிலன் அரக்கனை விதியின் மேன்மையால்.

பொருள் · Meaning in Tamil

உடன் நின்றிலென் - என் தம்பியுடன் போர்க்களத்தில் நின்றிலேன்; எறிபடைக்கு நீதியால் ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன் - எறிகின்ற படைக்கலன்களுக்கு முறைமைப்படி பொருந்திய பூசையைச் செய்யக் கருதினேன்; நமர் எலாம் பொன்றினர் - நம்மவர் எல்லாம் இறந்தனர்; இளவல் வென்றிலென் அரக்கனை விதியின் மேன்மையால் போயினன் - என் தம்பியும் இந்திரசித்தனை வெல்லாமல் தீவினையின் மிகுதியால் இறந்து போயினன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “I did not stand beside him; I thought to perform
  2. the worship due by rule to the weapons;
  3. all our people have perished; my younger brother is gone;
  4. I did not conquer the demon, so mighty was fate.”

What the poem says

Irāmaṉ blames himself further. When Ilakkuvaṉ went out to fight, Irāmaṉ stayed behind to perform the ritual worship of his weapons and was not at his brother's side.

Meanwhile their whole army fell and his brother died without defeating Intiracittu, because fate was too strong.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"niṉṟileṉ uṭaṉ neṟi paṭaikku nītiyāl
oṉṟiya pūcaṉai iyaṟṟa uṉṉiṉēṉ;
poṉṟiṉar namar elām; iḷaval pōyiṉāṉ;
veṉṟileṉ arakkaṉai vitiyiṉ mēṉmaiyāl.