கம்பராமாயணம் 8825 · யுத்த 23.75
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஈண்டு இருந்து இவை இவை இயம்பும் ஏழைமை
வேண்டுவது அன்று; இனி அமரின் வீடிய
ஆண்தகை அன்பரை அமரர் நாட்டிடைக்
காண்டலே நலம்; பிற கண்டது இல்லையால்.
பொருள் · Meaning in Tamil
ஈண்டுஇவண் இருந்து இவை இயம்பும் ஏழைமை வேண்டுவது அன்று - இப்போது இங்கே இருந்து இவற்றைச் சொல்லுகின்ற பேதைமை வேண்டத் தகுவதன்று; இனி அமரின் வீடிய ஆண் தகை அன்பரை - இனி போரில் இறந்துபட்ட ஆண் தகையாகிய இலக்குவனையும், அன்பர்களையும்; அமரர் நாட்டிடைக் காண்டலே நலம் பிற கண்டது இல்லையால் - (இறந்துபோய்) வீரசுவர்க்கத்தில் காண்பதே நல்லது, இதைத் தவிரவேறு வழி தோன்றவில்லை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “There is no call for this folly of sitting here
- and saying such things over and over; now, to see
- in the land of the immortals the manly one and the loving friends who fell in battle
- is best; I see no other way.”
What the poem says
Irāmaṉ stops his self-reproach as pointless. The only course he can see now is to die himself.
Then he would join Ilakkuvaṉ and his fallen friends in the heaven of warriors who die in battle.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īṇṭu ivaṇ iruntu ivai ivai iyampum ēḻaimai
vēṇṭuvatu aṉṟu; iṉi amariṉ vīṭiya
āṇ takai aṉparai amarar nāṭṭiṭaik
kāṇṭalē nalam; piṟa kaṇṭatu illaiyāl.