கம்பராமாயணம் 8826 · யுத்த 23.76

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எம்பியைத் துணைவரை இழந்த நான் இனி
வெம்புபோர் அரக்கரை முருக்கி வேர் அறுத்து
அம்பினால் இராவணன் ஆவி பாழ்படுத்து
உம்பருக்கு உதவி மேல் உறுவது என் அரோ?

பொருள் · Meaning in Tamil

எம்பியைத் துணைவரை இழந்தயான் - என் தம்பியையும் துணைவரையும் இழந்துவிட்ட நான்; இனி வெம்புபோர் அரக்கரை முருக்கி வேர் அறுத்து - இனிமேல் மனம் வெதும்பிச் செய்கின்ற போரில் அரக்கரைக் கொன்று அடியோடு அழித்துவிட்டு; அம்பினின் இராவணன் ஆவி பாழ்படுத்து - என் அம்பினால் இராவணன் உயிரையும் ஒழித்துவிட்டு; உம்பருக்கு உதவி மேல் உறுவது என் - தேவர்களுக்கு உதவி செய்து யான் இனி அடையப் போவது என்ன இருக்கின்றது? அரோ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “I who have lost my brother and my companions, if from now on
  2. I crush the demons in burning war and tear them out by the root,
  3. and lay waste Irāvaṇaṉ's life with my arrows,
  4. and so help the gods, what is there in it for me?”

What the poem says

Irāmaṉ asks what victory would be worth now. He could still destroy the demons, kill Irāvaṇaṉ and fulfil his promise to the gods.

But with his brother and friends gone, he would gain nothing from it himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'empiyait tuṇaivarai iḻanta yāṉ iṉi
vempu pōr arakkarai murukki vēr aṟuttu
ampiṉiṉ irāvaṇaṉ āvi pāḻpaṭuttu
umparukku utavi mēl uṟuvatu eṉ arō?